யாழ் கல்வியங்காட்டு பகுதியில் பெண்ணிற்கு நடந்த விபரீதம்

யாழ்ப்பாணம் கல்வியங்காட்டு பகுதியில் தீ மூட்டி தற்கொலைக்கு முயற்சித்த பெண்ணொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றது.எரிந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்த போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கல்வியங்காடு, G.P.S வீதியை சேர்ந்த பிரபாகரன் ஜெயமலர் என்ற 43 வயதுடைய குடும்பப் பெண்ணே இவ்வாறு மரணமானார்.

குறித்த பெண் குருதிப்புற்றுநோயால் பாதிக்கப்பட்டதனால் மன அழுத்தத்துக்குள்ளாகி தற்கொலைக்கு முயற்சித்ததாக தெரிய வருகின்றது.