உணவு வழங்கிய பெண் காப்பாளரை இரையாக்கிய சைபீரியன் புலி!!

ரஷ்யாவில் உள்ள மிருககாட்சிசாலை ஒன்றில் உணவு வழங்கிய பெண் காப்பாளர் மீது பாய்ந்து தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்ய மிருககாட்சிசாலையில் உள்ள சைபீரியன் புலி ஒன்றிற்கு உணவு வழங்க பெண் காப்பாளர் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அந்த புலி பெண் காப்பாளர் மீது பாய்ந்து அவரை மறைவிடத்திற்கு இழுந்து சென்றது. 

இதை கண்ட மக்கள் கூச்சல் எழுப்பியும், அருகில் இருந்த பொருட்களை புலியின் மீது வீசியும் பெண் காப்பாளரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து புலி அந்த காப்பாளரை விட்டு சென்றது. பின்னர், சக காப்பாளர்கள் அந்த பெண் காப்பாளரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளானர்.

உயிருக்கு எந்த ஆபத்துமின்றி பெண் காப்பாளர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் அங்கு சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.