தாயின் கண்களைப் பறித்த டொக்டர் மலரவனின் கண்களை பிடுங்கும் இளைஞன்!! அதிர்ச்சி காணொளி

நொதேன் வைத்தியசாலையில்  பராமரிப்பற்ற சத்திரசிகிச்சைக் கூடத்தில் வைத்து தனது தாயின் கண்களுக்கு அறுவைச் சிகிச்சை செய்து கண்களைக் குருடாக்கிய கண் வைத்திய நிபுணர் என்ற பெயரில் உலாவும் மலரவன் என்பவனின் கண்களை கேள்விகளால் பிடுங்கி எறிகின்றான் இந்த இளைஞன்.

இளைஞனின்  தாய்க்கு கண் ஒப்பரேசன் செய்த பின்னர் அத் தாயக்கு கண்ணில் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் குறித்த இளைஞன் மலரவன் டொக்டரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது தாய்க்கு ஏற்பட்ட பிரச்சனை தொடர்பில் கேட்ட போது அந்த கண் வைத்தியத்திற்குரிய திரவம் இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்டது எனவும் அதனாலேயே பிரச்சனை எனவும் தெரிவித்தாராம்.

அத்துடன் தான் ஒப்பரேசன் தியேட்டரில் இருப்பதாகவும் ஒப்பரேசன் முடிந்தவுடன் கதைப்பதாகவும் மலரவன் டொக்டர் தெரிவித்துள்ளாராம். நொதேன் வைத்தியசாலையில் இந்தப் பிரச்சனை தொடர்பாக குறித்த இளைஞன் தொர்பு கொண்டு கேட்ட போது அந்த வைத்தியாலை தெரிவித்த கருத்து என்னவெனின் மாதம் ஒன்றுக்கு 500 கண் அறுவைச் சிகிச்சைகளுக்கு மேல் இங்கு நடப்பதாகவும் தாங்கள் ஒரே திரவத்தையே பயன்படுத்துவதாக தெரிவித்திருந்தார்களாம்....

குறித்த இளைஞன் நொதேன் வைத்தியசாலை மற்றும் மலரவன் டொக்டர் தொடர்பாக பின்வரும் அர்த்ததில் மிகச் சரியான கேள்விகளை கேட்டுள்ளார்.

மலரவன் டொக்டரே ஒப்பரேசன் தியேட்டருக்குள் எதற்காக போனைக் கொண்டு போனீர்? போன் கொண்டு போயிருந்தாலும் ஒப்பரேசன் செய்து கொண்டு எப்படி போன் கதைப்பீர்? நானும் தமிழன், நீரும் தமிழன். எதற்காக என்னும் ஆங்கிலத்தில் கதைத்தீர்? ஆங்கிலம் கதைத்தவுடன் நான் பயந்துவிடுவேன் என்று நினைத்தீரா? அம்மாவுக்கு கொடுத்த வைத்தியம் தொடர்பாக அறிக்கையைக் கேட்ட போது அதற்கு பேய்க்காட்டி இரண்டு துண்டுகளை ஈமெயிலில் அனுப்பியுள்ளாய். அத்துடன் கெல்த் மினிஸ்ரி இன்வோல்ட் ஆகிட்டுது என சொல்லி றிப்போட்டை அனுப்பியுள்ளாய்!! காலத்தை இழுத்தடிப்பதற்காகவும் விட்ட பிழையை மழுப்பிறதுக்காகவும் பல காரியங்களைச் செய்து கொண்டிருக்கிறாய்..... உங்களை எல்லாம் தேசத் துரோகிகள் என சுட்டுத் தள்ள வேணும்.

யாழ்ப்பாணத்தில் உள்ளவர்களை தமது மருந்துகள் மூலம் பரிசோதிப்பதற்காக பல வெளிநாட்டு நிறுவனங்கள் இவ்வாறான வைத்தியசாலைகளையும் வைத்தியர்களையும் பாவிப்பதாக அதிர்ச்சித் தகவல்கள் கிடைத்துள்ளன. குரங்கிலும் எலியிலும் பரிசோதிக்க வேண்டிய மருந்துகளை வடக்கு, கிழக்கில் உள்ள தமிழர்களிடத்தில் பாவித்துப் பார்ப்பதற்கு பல வைத்தியர்களை விலைக்கு வாங்கியுள்ளது வெளிநாட்டு நிறுவனங்கள் என அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவ்வாறான வெளிநாட்டு வைத்திய நிறுவனமே நொதேன் வைத்தியசாலைக்கு கண் மருந்தை கொடுத்து சிலருக்கு பரிசோதனை செய்வதற்கு முயன்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவ்வாறு பரிசோதனை செய்வதற்கு குறி்தத நொதேன் நிறுவனத்துக்கும் மலரவன் டொக்டருக்கும் அந்த மருந்துக் கம்பனி கோடிக்கணக்கான ரூபாய்களை கொடுத்துள்ளதாக இரகசியத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்தத் தகவ்லகளை இந்த இளைஞன் வெளிப்படுத்தியுள்ளான்.

நொதேன் வைத்தியசாலையில் மலவன் டொக்டர் மாதம் ஒன்றுக்கு 500 கண்களுக்கு அறுவைச் சிகிச்சை செய்வதாக வைத்தியசாலை நிர்வாகமே தெரிவித்துள்ளது. ஒரு கண் அறுவைச் சிகிச்சை செய்வதற்கு மலரவன் டொக்டருக்கு 25 ஆயிரம் ரூபா கிடைக்கின்றது. அப்படியாயின் மலரவன் டொக்டர் மாதம் ஒன்றுக்கு ஒரு கோடியே 25 லட்சம் ரூபாக்களை நொதேன் வைத்தியசாலையில் மட்டும் தேறிய லாபமாகப் பெறுகின்றார். இதை விட இவர் வேறு வைத்தியசாலைகளில் பெறும் பணம் வேறானது.

இவர் இந்தப் பணத்திற்கு சரியான முறையில் வரி கட்டுகின்றாரா? இவரால் கண் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு இவர் கோடிக் கணக்கில் நட்ட ஈடு கொடுக்க வேண்டும். ஆனால் அவ்வாறு நட்ட ஈடு பெறும் அளவுக்கு பாதிக்கப்பட்டவர்கள் சட்ட நடவடிக்கை இவர் மீது எடுப்பாரா? அல்லது இவரை பாதுகாப்பதற்கு இவரிடம் லஞ்சம் பெற்று அதிகாரிகள் செயற்படுவார்களா?

ஆனால் மலரவன் டொக்டர் நட்டஈடு கொடுப்பவர் போலோ அல்லது தன்னால் பலருக்கு கண்கள் குருடாக்கப்ட்டமை தொடர்பிலோ எந்தவித அக்கறையும் செலுத்தவில்லை என்பது அவர் கொண்டாடிய பிறந்த தினத்தில் இருந்து தெரியவருகின்றது.

நொதேன் வைத்தியசாலை கண் அறுவைச் சிகிச்சையில் மட்டும் மாதம் ஒன்றுக்கு பல கோடி ரூபாக்களை பெறுகின்றது. அத்துடன் அங்கு வரும் நோயாளர்களை புது மருந்துகளைப் பரிசோதனை செய்வதற்கு பயன்படுத்துகின்றது. அந்தப் பரிசோதனையில் பலர் பரிதாபகரமாக பலியாகலாம். பலர் அங்கவீனர்களாகலாம். இவை எல்லாம் மிகச் சுலபமாக மூடி மறைக்கப்பட்டுவிடும். நொதேன் வைத்தியசாலை மட்டும் வெளிநாட்டு ஆராய்ச்சி நிறுவனங்களிடம் காசு வாங்கி மக்களிடம் மருந்துகளை பரிசோதனைக்காக பயன்படுத்தவில்லை. வேறு பல வைத்தியசாலைகளும் இவ்வாறு செயற்படுகின்றன.

மக்களை கேடயங்களாக மாற்றி கோடிக்கணக்காக பணம் சம்பாதிக்கின்ற வைத்தியர்கள், வைத்தியசாலைகள் தொடர்பில் மிகச் சரியான நடவடிக்கை சமூக மட்டத்தில்  எடுப்பது காலத்தின் கட்டாயமாகும்