பலரது கண்ணைப் பறித்த வைத்தியசாலையி்ன் சத்திரசிகிச்சைப் பிரிவு இழுத்துமூடப்பட்டது!! 2ம் இணைப்பு

யாழ் திருநெல்வேலியில் உள்ள நோதேர்ன்  தனியார் வைத்தியசாலையின் அறுவைச்சிகிச்சை பிரிவுகள் வடமாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலனின் உத்தரவிற்கு அமைவாக யாழ்ப்பாணம் சுகாதார சேவைகள் பணிமனை அதிகாரிகளினால் நேற்று சீல் வைத்து மூடப்பட்டுள்ளது.

குறித்த தகவலினை வடமாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் உறுதிப்படுத்தியுள்ளார்.அண்மையில் குறித்த வைத்தியசாலையில் கண் சத்திர சிகிச்சைக்கு  உற்படுத்தப்பட்ட 10 பேர் திடீர் கிருமி தொற்றுக்கு உள்ளான நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய கண் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.

கண் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட குறித்த 10 பேரினதும் கண்களில் நோய்த்தாக்கம் அதிகமாக காணப்படுவதினால் பலரது கண்கள் முழுமையாக அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த தனியார் வைத்தியசாலையின் சத்திர சிகிச்சைப்பிரிவில் நோய்த்தொற்று ஏற்பட்டமைக்கான காரணத்தை அறிந்து கொள்ள விசேட ஒழு ஒன்று கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு செல்லவுள்ளனர்.

இவ்விடயம் தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளருடன் தொடர்பு கொள்ளப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

குறித்த தனியார் வைத்தியசாலையின் சத்திர சிகிச்சைப்பிரிவுகள் வடமாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலனின் உத்தரவிற்கு அமைவாக நேற்று சீல் வைத்து மூடப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொழும்பில் இருந்து விசேட நிபுனர் குழு யாழ்ப்பாணம் சென்று விசாரனைகளை முன்னெடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இக் கண்சிகிச்சையை மேற் கொண்ட கண் வைத்தியநிபுணர் மலரவன் காசு சம்பாதிப்பதையே பிரதானமாகக் கொண்டு செயற்பட்டுள்ளார் எனத் தெரியவருகின்றது. இவர் குறித்த வைத்தியசாலையில் நாள் ஒன்றுக்கு ஒரு மணித்தியாலத்தில் 8 தொடக்கம் 10 பேருக்கு கண் சத்திரசிகிச்சை மேற் கொள்வதாக தெரியவருகின்றது. ஒரு கண் அறுவைச்சிகிச்சை பெறும் நோயாளிக்கு கிட்டத்தட்ட 10 நிமிடங்கள் மாத்திரமே இவர் செலவு செய்கின்றார்.  கண் சத்திரசிகிச்சை பெறும் நோயாளிகளிடம் இருந்து குறித்த வைத்தியசாலை 60 ஆயிரம் ரூபாக்களுக்கு மேல் பெறுகின்றது. அதில் மலரவனுக்கு கிட்டத்தட்ட 25 ஆயிரம் ரூபா  வைத்தியரி்ன் கட்டணமாக கொடுக்கப்படுகின்றது. ம