யாழில் கொடூரம்!! 3பிள்ளைகளுடன் தாய் விசமருத்தி தற்கொலை!!

காரணம் கொடுமையானது... 

யாழ் கஸ்தூரியார் வீதியை சேர்ந்த இளம் குடும்பம் ஒன்று கடன் தொல்லை தாங்காது சற்று முன்னர் விசமருந்தி தற்கொலை செய்துள்ளனர் என தெரியவருகின்றது5 வயதிற்கு உட்பட்ட 3 குழந்தைகளுடன் தாயும் ஐஸ் கிறிமிற்குள் விசத்தை ஊற்றி பருகியுள்ளதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவருகின்றது.

இவர்களது குடும்ப தலைவரும் இதே காரணத்திற்காக கடந்த 45 நாட்களிற்கு முன்னர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டுள்ளார்,இந்நிலையில் கடன் கொடுத்தவர்களின் கொரப் பிடியால் இன்று முழு குடும்பமும் உயிரை மாய்த்துள்ளது.

மேலதிக விபரங்கள் விரைவில்...

மேலதிக இணைப்பு...

யாழ். அரியாலை பகுதியில் உள்ள 28 வயதுடைய இளம் தாய் ஒருவர் தனது 4 வயது பெண் குழந்தை, 2 மற்றும் 1 வயது ஆண் குழந்தைகளுக்கு நஞ்சு கொடுத்து விட்டு தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், குறித்த கடிதத்தை வாசிக்கும் போது அனைவரும் கவலையடைந்ததை காணக்கூடியதாக உள்ளது.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்திருந்த பொலிஸாருக்கே குறித்த பெண் எழுதிய கடிதம் கிடைத்துள்ளது.

இதில் தான் தற்கொலை செய்து கொண்டமைக்கான காரணத்தை குறிப்பிட்டதுடன், குடும்பத்தாருக்கு ஆருதல் கூறியும் கடிதம் எழுதியுள்ளார்.

இவர் நீதிபதி இளஞ்செழியனுக்கு எழுதிய கடிதத்தில் “எங்கள் சாவுக்குசிறுசங்கர் மனைவி சுகன்யா, சிறிதரன் ஆகியோரே காரணம், தவறு செய்பவனை விட தவறு செய்ய தூண்டுபவனே குற்றவாளி” என அந்த கடிதத்தில் ஒரு இடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.