ஹர்த்தால் தினத்தில் கடைக்குள் லீலை!! இளைஞர்கள் முற்றுகை!! யுவதி தப்பி ஓட்டம்!!

இன்று யாழ் குடாநாடு உட்பட வடக்கு கிழக்கில் ஹர்த்தால் நடைபெற்றுக் கொண்டிருநத் சமயம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இடம் ஒன்றில் கடை ஒன்றினுள் சல்லாபத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த கடைக்காரனையும் யுவதியையும் இளைஞர்கள் கையும் மெய்யுமாக பிடித்துள்ளனர். இன்று காலை 10 மணியளவில் இச் சம்பவம் பருத்தித்துறை வீதியில் இடம்பெற்றுள்ளது.

அரை குறையாக மூடப்பட்டிருந்த தையல் கடை ஒன்றின் முன் பெண்களின் பிளசர் மோட்டார் சைக்கிள் நின்றுள்ளது. குறித்த கடை மூடப்பட்டுள்ளதா இல்லையா அல்லது திருடர்கள் யாராவது புகுந்துள்ளார்களா என சந்தேகப்பட்டு உண்மை நிலையை அறிவதற்காக என அறிவதற்காக அந்தக் கடைக்குச் சென்ற இளைஞர்கள் சிலர் மூடியிருந்த கடைக் கதவை இழுத்துள்ளனர்.

கடையினுள்ளே தையல்கடை முதலாளியும் யுவதி ஒருவரும் அலங்கோலமான நிலையில் இருந்துள்ளனர். இளைஞர்கள் கடையைத் திறந்து உள்ளே நுழைந்த போது யுவதி, ’தன்னை காப்பாற்றுங்கள், கள்ளன் கள்ளன் என குக்குரல் இட்டு கத்தி இளைஞர்களை அச்சுறுத்தி அங்கிருந்து ஓடித்தப்பிவிட்டாள். யுவதியின் குக் குரலால் அப்பகுதிக்கு வந்த வழிப்போக்கர்கள் பலருக்கு நிலை என்னவென தெரியாது ஏராளமானவர்கள் கடையை சூழ்ந்து நின்றதாக தெரியவருகின்றது.

இதன் பின்னர் குறித்த கடை முதலாளியை அங்கு நின்றவர்கள் கடுமையாக எச்சரித்து அனுப்பியதாகத் தெரியவருகின்றது.