ஹர்த்தாலால் முடங்கியது வடக்கு கிழக்கு

தமிழ்  அரசியல் கைதிகளின்  விடுதலைக்காக வடகிழக்கு மாகாணம் தழுவிய  ரீதியில் முன்னெடுக்கப்படும்  பூரண கர்த்தாலுக்கு வடக்கு கிழக்கைச் சேர்ந்த அனைத்துத் தரப்பினரும் ஆதரவு கொடுத்துள்ளனர். தற்போது வடக்கு கிழக்கு எங்கும் முழுமையான ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது. அரச அலுவலகங்கள், வங்கிகள், பாடசாலைகள், வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு மக்கள் முழுமையான ஆதரவை கொடுத்துள்ளனர்.