யாழில் ரீச்சரின் லப்டொப்பில் ஆபாசப்படம் பார்த்த மாணவர்கள்!! இருவர் இடை நிறுத்தம்!!

யாழில் உள்ள  கிறீஸ்தவப் பாடசாலை ஒன்றில் கணனிப் பகுதி ஆசிரியையாகக் கடமையாற்றுபவரின் கணனியில் ஆபாசப்படங்கள் பார்த்த மாணவர்கள் இருவரை பாடசாலை நிர்வாகம் இடைநிறுத்தியுள்ளது. குறித்த பாடசாலையில் உள்ள கணனிப் பிரிவில் இணையத்தொடர்பு மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே இருக்கின்றது. குறிப்பிட்ட ஓரிரு கணனிகளுக்கே இணைய இணைப்பு இருந்துள்ளது. அதுவும் ஆசிரியையின் மேற்பார்வையிலேயே மாணவர்கள் இணையத்தைப் பயன்படுத்தி வந்துள்ளனர். முகப்புத்தகம் மற்றும் பல தளங்கள் குறித்த கணனியில் பார்ப்பதை ஆசிரியை மென் பொருளால் தடை செய்திருந்தார். இந் நிலையில் தனது லப்டொப் கணனிக்கு ஆசிரியை அவ்வாறான மென்பொருள் மூலமாக தடை செய்யவில்லை.

ஆசிரியையை அதிபர் அவசர அலுவலாக அலுவலகத்துக்கு அழைத்துள்ளார். இச் சந்தர்ப்பத்தில் குறித்த ஆசிரியையின் கணனியில் கை வைத்த மாணவர்கள் சிலர் ஆசிரியையின் கணனியில் ஆபாச இணையத்தளங்களை தேடு பொறி மூலம் தேடி பார்த்துள்ளனர். ஆசிரியை வந்தவுடன் கணனியை அப்படியே நிறுத்திவிட்டனர். ஆசிரியை அதனைக் கவனிக்காது தனது லப்டொப்பை வீட்டுக்குக் கொண்டு சென்றுள்ளார். அதன் பின்னர் லப்டொப்பை தனது செயற்பாட்டிற்காக திறந்த இணையத்தளத்திற்கு செல்ல முற்பட்ட போது ஆபாச இணையத்தளங்கள் பொப் பொப்பாக வந்துள்ளது.

அதிர்ச்சியடைந்த ஆசிரியை குறித்த இணையத்தளத்திற்கு சென்றவர்கள் எந்த நேரத்தில் தனது கணனியில் பார்த்துள்ளார்கள் என இணையத்தள வரலாற்று பகுதியை பார்த்து அறிந்துள்ளார். அதன் பின்னர் பாடசாலையில் அதிபர் மற்றும் பலர் மூலம் நடாத்திய விசாரணையில் கணனியில் ஆபாசப்படம் பார்த்த இரு மாணவர்கள் அடையாளம் காணப்பட்டு பாடசாலையில் இருந்து கட்டாயமாக விலக்கி வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.