வெடிப்பை ஒழுங்காக கவனிப்பாரா விஜயகலா!

இலங்கை பாராளுமன்றத்திற்கு தெரிவாகிய ஒவ்வொரு உறுப்பினர்களுக்கும் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்ட நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் ஒன்றரைக் கோடிரூபா வருடாந்தம் ஒதுக்கப்படுகின்றது.

 இந்த நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களது பிரதேசத்தைச் சேர்ந்த வீதிகள், மின் விநியோகத் திட்டங்கள், நீர் விநியோகங்கள் மதகுகள், பாலங்கள் போன்றவற்றை புனரமைக்கலாம்.

யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரே ஒரு அரச அமைச்சரான விஜயகலா தனது யாழ்ப்பாணப் பிரதேசத்துக்கு தனது நிதியின் கீழ் என்ன வீதிகளைத் திருத்தினார், என்ன முயற்சிகளைச் செய்தார் என்பது  கேள்விக்குறியே. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள்தான் மக்களை ஏமாற்றுகின்றார்கள் என அரசதரப்பைச் சேர்ந்தவர்கள் தெரிவித்து வருகின்றார்கள். அது உண்மையாகவும் இருக்கலாம். ஆனால் அரசதரப்பைச் சேர்ந்தவராக அரசாங்கத்தின் ஒரு பிரிவுடன் நெருக்கமாக உள்ள அமைச்சர் விஜயகலா யாழ்ப்பாணத்தை மிகவும் கேவலப்படுத்தி வருகின்றாரே தவிர எந்தவித அபிவிருத்தியையும் செய்ததாகத் தெரியவில்லை.

குற்றவாளிகளையும் காமுகர்களையும் தனது அடியாட்களாக வைத்திருப்பதுடன் தீவகத்தில் கொடூரமாக வல்லுறவுக்குள்ளாகி கொலை செய்யப்பட்ட வித்தியாவின் கொலையாளிக்கும் உதவியிருப்பது அனைவருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

அத்துடன் விஜயகலாவின் கேவலமான செயற்பாடு நிற்கவில்லை. மிகக் கேவலமான இணையத்தளத்தை நடாத்தும் ஒருவனையும் விஜயகலா தனது அணியில் செயற்படுத்தி வருகின்றார்.

தீவக மக்களுக்கு கேவங்களைப் புரிந்து வரும் விஜயகலா தீவக மக்களுக்காக தனது நிதியில் இருந்து ஏதாவது அபிவிருத்தியை செய்துள்ளாரா என பார்த்தால் அப்படி ஏதுமே நடக்கவில்லை.

இங்கு காட்டப்பட்டுள்ள புகைப்படங்கள் எமது இணையத்தள மின்னஞ்சலுக்கு அனுப்பப்பட்டவையாகும்.

நெடுந்தீவில் உள்ள வீதி ஒன்று இவ்வாறு கேவலமாகக் காணப்படுகின்றது. வீதியின் நடுவே பாரிய வெடிப்பு காணப்படுகின்றது.  இந்த வீதியை  அபிவிருத்தி செய்வாரா விஜயகலா?

தங்கள் பிரதேசத்துக்கு விஜயகலா ஒருதடவையேனும் தலைகாட்டவில்லை என நெடுந்தீவுப் பிரதேசமக்கள் தமது ஆதங்கங்களை எமக்கு மின்னஞ்சலாக அனுப்பியுள்ளனர்.