மட்டுவில் முத்துமாரியம்மன் கோவில் பகுதியில் விபத்து ஒருவர் படுகாயம்

யாழ்ப்பாணம் சாவகச்சேரி மட்டுவில் முத்துமாரியம்மன் கோவில் பகுதியில் மோட்டார் சைக்கிலும் துவிச்சக்கரவண்டியும் மோதி விபத்துக் குள்ளாகியதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இன்று காலை 9:40மணியளவில் நடைபெற்ற இச் சம்பவத்தில் மட்டுவில் பகுதியை சேர்ந்த ஒருவர் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக சாவகச்சேரி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.