ஜி.வி.பிரகாஷின் 100% காதல் படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

தெலுங்கில் பெரும் வரவேற்பைப் பெற்ற '100% லவ்' படத்தின் தமிழ் ரீமேக்கில் நாயகனாக நடிக்கவுள்ளார் ஜி.வி.பிரகாஷ். இதன் முதற்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் சென்னையில் தொடங்கியது.

தெலுங்கில் சுகுமார் இயக்கத்தில் நாக சைதன்யா, தமன்னா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான '100% லவ்' படம் சூப்பர்  ஹிட்டானது. தமிழில் லாவண்யா திரிபாதிக்கு பதிலாக 'அர்ஜுன் ரெட்டி' படத்தின் நாயகி ஷாலினி பாண்டே நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 2018 கோடை விடுமுறைக்கு படம் வெளியாகும் எனவும் படக்குழு அறிவித்துள்ளது.

இயக்குநர் சுகுமார் தயாரிக்கவுள்ள இப்படத்தில் நாயகன் மற்றும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ். எம்.எம். சந்திரமெளலி இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாக இருக்கிறார். இப்படத்தின் பெரும்பகுதி காட்சிகளை லண்டனில் படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.