யாழ்ப்பாணம் விரையும் மைத்திரி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் சனிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார்.

கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் மற்றும் கல்வி இராஜாங்க அமைச்சர் வி. இராதாகிருஸ்ணன் ஆகியோரின் கோரிக்கைக்கு அமைவாகவே ஜனாதிபதி யாழிற்கு விஜயம் செய்யவுள்ளார்.

அகில இலங்கை தமிழ்த் தினப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில் வழங்கும் நிகழ்வு எதிர்வரும் 14 ஆம் திகதி யாழ்ப்பாணம் இந்துகல்லூரி விளையாட்டு திடலில் காலை 10.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

இந்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன , எதிர்க்கட்சி தலைவரும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் வடமாகாண ஆளுநர் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர்.