கிணற்றில் சடலம்!! மகனின் தாக்குதலால் தாய் இறப்பு?? யாழில் சம்பவம்!!

 யாழ்ப்பாணம் இராசாவின் தோட்டம் பகுதியிலுள்ள கிணறொன்றில் 70 வயதுடைய பெண் ஒருவரின் சடலம் காணப்படுகின்றது.

அப்பகுதி கிராம சேவகரால் பொலிசாருக்கு இன்று (09.10.17) மதியம் இச்சம்பவம் தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மூதாட்டி கிணற்றில் தவறி விழுந்தாரா அல்லது யாராவது அவரை கொலை செய்து கிணற்றில் போட்டனரா என்பது தொடர்பில் யாழ்ப்பாண பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை குறித்த பெண்ணின் மகன் தாயாரைத் தாக்கியுள்ளார் என அப்பகுதியில் உள்ளவர்களில் சிலர் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

இதே வேளை குறித்த பெண்ணின் மகன் மனநலம் குன்றியவர் எனவும் அவனே பலகையால் பெண்ணைத் தாக்கி கிணற்றினுள் போட்டதாகவும் அயலவர்கள் சந்தேகிக்கின்றனர். இதே வேளை மகனைப் பொலிசார் கைது செய்துள்ளதாக தெரியவருகின்றது.

இறந்தவர் இராசாவின் தோட்டம் பகுதியை சேர்ந்த செல்லப்பா நந்தாம்பிகை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.