சட்டை பையில் வைத்திருந்த செல்போன் வெடித்து சிதறிய அதிர்ச்சி வீடியோ

செல்போன்கள் அவ்வப்போது திடீர் திடீரென வெடித்து சிதறி காயத்தை உண்டாக்குவது, சிலசமயம் உயிரையே பலிவாங்குவதுமான சம்பவங்கள் அவ்வப்போது நடந்து வருகிறது.

இந்த நிலையில் இந்தோனேஷியாவை சேர்ந்த 46 வயது நபர் ஒருவர் ஓட்டல் ஒன்றின் லாபியில் நின்று கொண்டிருந்தபோது அவரது சட்டை பையில் உள்ள செல்போன் திடீரென வெடித்தது.

இதனால் அந்த நபரின் சட்டையில் தீப்பிடித்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஒருவர் அந்த நபரின் சட்டையை கழட்டி அவரை காப்பாற்றினார். இதுகுறித்த வீடியோ ஒன்று தற்போது இணையதளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது. இதோ அந்த வீடியோ

https://www.youtube.com/watch?v=ue0XWQ4oqKw