09. 10. 2017 இன்றைய இராசிப் பலன்

மேஷம்

கடந்த இரண்டு நாட்களாக இருந்த கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். வராது என்றிருந்த பணம் வரும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். தொழில், உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். அதிஷ்ட எண்: 8அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிளிப் பச்சை

ரிஷபம்

ராசிக்குள் சந்திரன் நுழைவதால் ஒரு வித படபடப்பு வந்து செல்லும். குடும்பத்தாருடன் இணக்கமாக செல்லவும். கிருத்திகை நட்சத்திரக்காரர்களுக்கு டென்ஷன் வந்துப் போகும். மற்றவர்களைப் பற்றி வீண் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. உத்யோகத்தில் மறைமுக அவமானங்கள் வரக்கூடும். அதிஷ்ட எண்: 9அதிஷ்ட நிறங்கள்: வெளிர் மஞ்சள், ப்ரவுன்

மிதுனம்

வருங்காலம் குறித்த கவலைகள் வந்து நீங்கும். பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்துக் கொள்ளுங்கள். அரசு காரியங்கள் இழுபறியாகும். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் விட்டுக் கொடுத்துப் போங்கள். அதிஷ்ட எண்: 6அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ் பச்சை, வெள்ளை

கடகம்

எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பெற்றோர் ஒத்துழைப்பார்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் பழைய வேலையாட்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். அதிஷ்ட எண்: 1அதிஷ்ட நிறங்கள்: அடர் சிவப்பு, இளம்மஞ்சள்

சிம்மம்

உங்கள் பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிக் கொள்வீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கிகாரம் கிடைக்கும். அதிஷ்ட எண்: 2அதிஷ்ட நிறங்கள்: ஊதா, ரோஸ்

கன்னி

குடும்பத்தில் இருந்த கூச்சல், குழப்பம் விலகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உறவினர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். அதிஷ்ட எண்: 4அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிரே

துலாம்

சந்திராஷ்டமம் தொடங்குவதால் கோபத்தால் இழப்புகள் ஏற்படும். முன்பின் அறியாதவர்களிடம் குடும்ப அந்தரங்க விஷயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம். சிலர் உங்களை தாழ்த்திப் பேசினாலும் கலங்காதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு குறையும். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள். அதிஷ்ட எண்: 2அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ஆரஞ்சு

விருச்சிகம்

உங்கள் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். தாயார் ஆதரித்துப் பேசுவார். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். அதிஷ்ட எண்: 7அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, நீலம்

தனுசு

பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய உறவினர், நண்பர்களை சந்திப்பீர்கள். வழக்கில் திருப்பம் ஏற்படும். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். அதிஷ்ட எண்: 8அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, மயில் நீலம்

மகரம்

குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். அதிஷ்ட எண்: 1அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், மஞ்சள்

கும்பம்

பால்ய நண்பர்கள் உதவுவார்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். அதிஷ்ட எண்: 3அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், ப்ரவுன்

மீனம்

தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். அதிஷ்ட எண்: 2அதிஷ்ட நிறங்கள்: வைலெட், இளஞ்சிவப்பு