யாழிலிருந்து கொழும்பு சென்ற பஸ் மோதி சிங்களச் சிறுமி பலி!! பஸ்கள் மீது தாக்குதல்

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த Ncg என்னும் பேரூந்து கரவலகஸ்சுவ என்னும் இடத்தில்  பாடசாலை மாணவியை மோதி தள்ளி மாணவி சம்ப இடத்திலயே பலி. பஸ்சை சாரதி நிறுத்தாமல் சென்று பின்னர் புத்தளம் பொலிசாரினால் கைது செய்யபபட்டதாகக் கூறப்படுகிறது.  வழமையாவே Ncg யின் அதி வேகம் 140.   அதிவேகமே இதற்கு காரணம் என பொது மக்கள் தெரிவிக்கின்றனர். 15 நாளுக்கு முதல் சுன்னாகம் பகுதியில் வயேதிபரை மோதி தள்ளிய சம்பவம் இடம் பெற்றது

குறித்த பஸ் முதலாளி சிங்கள அரசியல்வாதி எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த பஸ் மோதி பாடசாலை மாணவி பலியாகியதால் அப்பகுதியில் பதற்றம் நிலவுவதாகவும் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு செல்லும் பஸ்களும் கொழும்பிலிருந்து யாழ் செல்லும் பஸ்களும் அப்பகுதியில் கல் வீச்சுத் தாக்குதலுக்கு முகம் கொடுப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதி வேகமாக செல்லும் பஸ்களில் பயணம் செய்யும் பயணிகள் சாரதியை அச்சுறுத்தி வழிக்கு கொண்டுவந்து இவ்வாறான விபத்துக்களை தவிர்ப்பதற்கு துணிவுடன் செயற்படுதல் அவசியம். இவ்வாறான பஸ்கள் தொடர்பாக பயணிகள் விழிப்புணர்வுடன் செயற்பட்டால் இவ்வாறான பஸ்களுக்கு தகுந்த நடவடிக்கைகள் எடுப்பதற்கு வழிவகுக்கலாம்.