யாழில் 19 வயது மாணவி 40 லட்சம் பெறுமதியான நகைகள் பணத்துடன் காதலனுடன் ஓட்டம்!!

யாழில் பிரபல கட்டட ஒப்பந்தகாரரின் மகளான பிரபல தனியார் மகளீர் பாடசாலை மாணவி பெருமளவு நகைகள் பணத்துடன் தனது காதலனுடன் தலைமறைவானார். இச் சம்பவத்தால் காதலனின் பெற்றோர் மற்றும் சகோதரங்கள் உயிர் அச்சுறுத்தல் காரணமாக தமது இருப்பிடத்தை விட்டு எழுந்து சென்றுள்ளதாகவும் தெரியவருகின்றது.

யாழ் அரியாலைப் பகுதியைச் சேர்ந்த கட்டட ஒப்பந்தகாரர் ஒருவரிடம் டிப்பர் சாரதியாக பணியாற்றிய 25 வயதாக இளைஞன் கட்டட ஒப்பந்தகாரரின் மகளுடன் காதல் தொடர்பில் இருப்பதாகத் தெரிவித்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கடுமையாகத் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். குறித்த சம்பவம் தொடர்பாக இளைஞனின் பெற்றோர் பொலிசாரிடம் முறையிடச் சென்ற போதும் இளைஞன் அவர்களைத் தடுத்து நிறுத்தியதாகத் தெரியவருகின்றது.

அதன் பின்னர் இரு தடவைகள் இளைஞனின் வீட்டுக்கு வந்து சினிமாப்பாணியில் கட்டட ஒப்பந்தகாரர் இளைஞனுக்கும் குடும்பத்தினருக்கும் கொலை அச்சுறுத்தல் விடுத்திருந்தார். அத்துடன் தனது மகளை தானே தனது வாகனத்தில் சென்று பாடசாலைக்கும் தனியார் கல்வி நிலையத்துக்கும் அழைத்துச் சென்று வந்துள்ளார். மகளது நண்பிகளும் மகளை சந்திப்பதற்கு தடை விதித்திருந்தாகத் தெரியவருகின்றது.

இவ்வாறான கடும் பாதுகாப்பின் மத்தியில் இன்று காலையில் இருந்து மகள் தலைமறைவாகியுள்ளார். தனது வீட்டில் இருந்த தாயின் தாலிக்கொடி மற்றும் பெருமளவு நகைகள் மற்றும் பணத்துடன்  மகள் காணாமல் போயுள்ளார். மகள் வீட்டில் இருந்து காதலனுடன் பாதுகாப்பான இடத்திற்கு சென்ற பின்னர் தனது தாய்க்கு தொலைபேசியில் அறிவித்த போதே மகள் தலைமறைவாகிய விடயம் ஒப்பந்தகாரருக்கு தெரியவந்துள்ளது.  அத்துடன் தனது செலவுக்காக தந்தையின் பணம் மற்றும் நகைகளை எடுத்து வந்துள்ளதாகவும் மகள் தொலைபேசியில் தாயிடம் தெரிவித்துள்ளார்.

இன்று மதியம் கட்டட ஒப்பந்தகாரர் மகளின் காதலனின் வீட்டுக்கு சென்று அட்டகாசம் புரிந்துள்ளார். காதலனின் தந்தையைத் தாக்கியதாகவும் தெரியவருகின்றது. அத்துடன் காதலனின் சகோதரியையும் தாக்க முற்பட்டு அயலவர்களால் தடுக்கப்பட்டுள்ளார். இச்சம்பவத்தை அடுத்து காதலனின் உத்தரவுக்கு இணங்க காதலனின் பெற்றோர் தமது வீட்டில் இருந்து வெளியேறி பாதுகாப்பான இடத்தில் இன்று மாலை தங்கியுள்ளதாக எமது செய்திச் சேவைக்கு காதலனின் நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மகளை காதலனிடம் இருந்து மீட்பதற்கு கட்டட ஒப்பந்தகாரர் பொலிசாரை இரகசியமாக அணுகியுள்ளதாகவும் தெரியவருகின்றது. கட்டட ஒப்பந்தகாரரின் மகளுக்கு 19 வயதும்  4 மாதங்களும்  ஆகி மேயரான வயதில் உள்ளதாகவும் காதலனின் நண்பர்கள் தெரிவித்துள்ளனர். பொலிசார் காதலனை கொடுமைப்படுத்தி கைது செய்ய முற்பட்டால் தாம் அவர்களது அனைத்து புகைப்படங்களும் காதலியின் முழுமையான சம்மதத்துடன் தெரிவித்த வீடியோவயும் எமது செய்திச் சேவைக்கு அனுப்பி மக்களிடம் நீதி கேட்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

கட்டட ஒப்பந்தகாரர் தனது பணம் மற்றும் நகைகளை முழுமையாக தம்மிடம் வந்து பெற்றுக் கொள்ளலாம் எனவும் தனக்கு காதலி மட்டுமே முக்கியமே தவிர காசு பணம் முக்கியமில்லை என காதலன் தெரிவித்துள்ளதாக காதலனின் நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.