யாழ் வீதிகளில் இரவில் ஒன்று கூடு காவாலிகளை கைது செய்ய ஆயத்தம்!!

இரவு நேரங்களில் சட்டவிரோத மாக வீதிகளில் ஒன்றுகூடும் இளைஞர்கள் கைதுசெய்யப்பட வேண்டுமென யாழ் மாவட்ட சிவில் பாதுகாப்பு குழு கூட்டத்தில் வலி யுறுத்தப்பட்டுள்ளது.

யாழ் மாவட்ட சிவில் பாதுகாப்பு குழு கூட்டம் நேற்றையதினம் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. அக்கூட் டத்தில் கருத்து தெரிவித்து அதிகாரி கள் மற்றும் சிவில் சமூகத்தினர்  மேற்குறித்த கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.

யாழ் மாவட்டத்தில் இடம்பெறும் குற்றச்செயல்கள் தொடர்பில் பல முறை பொலிஸாருக்கு தெரியப் படுத்திய போதும் காத்திரமான நட வடிக்கை  எடுத்ததாக தெரிய வில்லை.

சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பாக விழிப்புணர்வு நடவடிக்கைகள் அனைத்து தரப்பினராலும் பொதுமக்கள் மத்தியில் செயற் படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் கடந்து சட்ட நடவடி க்கை எடுப்பதுதான்

மிகமுக்கியம் ஆகும்.

யாழ்.நகர்ப் பகுதியில் அதிகளவான குற் றச்செயல்களில் இளையோர் ஈடுபடுகின்றனர். அவற்றை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும்.

 

இரவு நேரங்களில் கும்பலாக நிற்கும் இளைஞர்களால் வீதியில் சீரான போக்கு வரத்து செய்ய முடிவதில்லை. துணிவுடன் பெண் பிள்ளைகள் நடமாட முடிவதில்லை.

எனவே கூட்டமாக நிற்கும் இளைஞர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும். அதற்கு பொலிஸாருக்கு அனுமதி உண்டு என்ற காரணத்தினால் பொலிஸார் விரை ந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மற்றும் பொதுமக்கள் ஒன்றுகூடும் பொது இடங்களில் புகைப்பிடிப்பவர்கள் கைது செய்ய ப்பட வேண்டும் என்பதும் மிக முக்கியமாக உள்ளது என தெரிவிக்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த பொலிஸார், நாம் தொட ர்ச்சியாக நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறோம். இந்த வருடம் செப்ரெம்பர் மாதம் வரை புகைத்தல், மதுபான பாவனை தொட ர்பாக 302 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், குடிபோதையில் சாரத்தியம் மேற்கொண்டவ ர்கள் 56 பேரை கைது செய்துள்ளோம்,

அத்துடன் வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடையதாக 26 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். நாம் இந்த விடயங்கள் தொடர்பில் கவனத் தில் நிறுத்தி செயற்படுவோம். அதற்கு ஏனைய அதிகாரிகளின் ஒத்துழைப்பு அவசியம் ஆகும் என மேலும் சுட்டிக்காட்டியிருந்தனர்.