வித்தியா கொலையில் துாக்கு பெற்ற சசீந்திரனுக்கும் விஜயகலாவுக்கும் என்ன தொடர்பு!!

இவர்தான் மாணவி வித்தியா கொலைக்குற்றவாளிகளில் ஒருவரான மகாலிங்கம் சசீந்திரன் . பிரதான குற்றவாளியான மகாலிங்கம் சசிக்குமார் ( swiss kumar ) அவர்களின் சகோதரர் . சொந்த இடம் - ஊர்காவற்துறை புளியங்கூடல் . வேலணை துறையூர் பகுதியில் சுவிஸ்குமாரை மக்கள் கட்டிவைத்து தண்டனை வழங்கிக்கொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த பிரதி அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் சுவிஸ் குமாரை பார்த்து நீர் சசியின் அண்ணனா என்று வினவுகிறார் !


சுவிஸ்குமாரும் ஆம் என்று சொன்னவுடன் தனது பாதுகாப்பு அதிகாரிகளை வைத்து அவரை தனது பொறுப்பிலெடுத்து இரண்டு மணித்தியாலங்களாக அவ்விடத்திலேயே நின்று அவரது மனைவியிடம் ஒப்படைக்கிறார் . அதேதருணத்தில் குறிகாட்டுவான் பொலிஸ் காவலரணில் ஐந்து சந்தேக நபர்களும் ( சசி உட்பட ) தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படுகின்றனர் . இங்குதான் எனது சந்தேக வினாவினை தொடுக்கிறேன் , புங்குடுதீவிலும் , கொழும்பிலும் நீண்டகாலமாவே பல்வேறு குற்றச்செயல்களை இழைத்துவந்த மேற்படி சசி என்பவருக்கு விஜயகலா எவ்வாறு அறிமுகமாயிருந்தார் !

புங்குடுதீவிலே நின்றால் கேரள கஞ்சா கடத்துவது + அநாதரவான வீடுகளை கழட்டி , உடைத்து தமக்கு சொந்தமான லொறியொன்றில் ஏற்றி யாழிலுள்ள முஸ்லிம் இரும்பு வியாபாரிக்கு விற்பது + மதுபான விருந்துக்காக ஏழைகள் வளர்த்திடும் கோழி , ஆடுகளை திருடிச்செல்வது+ ஊரிலுள்ள இளைஞர்களோடு தேவையற்ற பிரச்சனைகளை , முரண்பாடுகளை ஏற்படுத்துவது + பல பெண்களை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியது அதேபோன்று கொழும்பிலே லொட்ஜ்களிலே தங்கிக்கொண்டு தன்னை ஓர் ஏஜென்சியாக காட்டிக்கொண்டு அப்பாவிகளை ஏமாற்றி பணம்பறிப்பது , தினமும் கசினோ செல்வது + சகோதரர் , நண்பர்களுடன் இணைந்து காலை 9 மணிக்கே மது அருந்தும் நிலையத்திற்கு செல்வது + வாழ்நாளில் சமூக சேவை எதனையுமே மேற்கொண்டிராதது போன்ற பல நற் பழக்கவழக்கங்களை தன்னகத்தே கொண்டிருந்த இந்த நபரோடு திருமதி விஜயகலா ஏன் தொடர்பிலிருந்தார் என்பதே ! வடமாகாணத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் செல்வாக்கினை ஓரளவாவது வைத்திருப்பதற்கு ரணிலுக்கு யாராவது ஒரு பணக்காரர் தேவை . அரசியலுக்கு எந்தவித தகுதியுமற்ற இந்த அம்மணிக்கு ரணில் முன்னுரிமை கொடுப்பதற்கான பிரதான காரணம் அதுவே !

இந்நிலையில் தனது தொலைபேசி அழைப்பினை அப்போதைய kayts hqi குயின்ரஸ் பெரேரா அலட்சியப்படுத்தினார் , சுவிஸ் குமாரை கைதுசெய்ய வரவில்லை அதனாலேயே இரண்டு மணித்தியாலயங்கள் அவருக்கு பாதுகாப்பாக இருந்து அவரது மனைவியிடம் ஒப்படைத்தேன் என்று மக்கள் பிரதிநிதியொருவர் கூறுவதென்பது சிறுபிள்ளைத்தனமானதே ! மேலும் சம்பவ இடத்தினருகேதான் துறையூர் கடற்படை முகாமுண்டு . அவர்கள் ஊடாக சுவிஸ்குமாரை இலகுவாக பொலிஸ்சில் ஒப்படைத்திருக்கலாம் . குறிகாட்டுவான் பொலிஸ் காவலரணில் தடுத்துவைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டுக்கொண்டிருந்த ஐந்து சந்தேகநபர்கள் மீதும் பொதுமக்கள் தாக்குதலை தொடுத்ததனால் குறிகாட்டுவானிலுள்ள கடற்படையினரின் உதவியுடனே சந்தேகநபர்களை ஊர்காவற்துறைக்கு கொண்டு செல்ல முடிந்ததென்பதனை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன் .

தன்னுயிரை பறிகொடுத்து தனது ஊரிலே இடம்பெற்று வந்த குற்றச்செயல்களை பெருமளவில் கட்டுப்படுத்திய

எங்கள் தங்கை வித்தியா நீண்டகாலமாகவே வித்தியா கொலையுடன் தொடர்புடைய செய்திகள்

 நீதிமன்றிலே நான் நேரடியாக அவதானித்த விடயங்கள் மற்றும் வழக்கினை நீர்த்துப்போக வைப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் , அரசியல் சதிகள் குறித்து வெளிப்படையாக பேசவேண்டும் என்று எண்ணியிருக்கிறேன். சிலரது விளம்பர நடவடிகைகளை பார்த்து கொதித்திருக்கின்றேன் ஆனாலும் நீதிமன்றில் வழக்கு நிலுவையிலிருந்ததால் எக்கருத்தினையும் வெளிப்படையாக கூறமுடியவில்லை . தற்போது நியாயமான தீர்ப்பு வெளியாகி எம் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளதால் பல சுவாரசியங்கள் , குழிபறிப்புக்கள் , நகைச்சுவை சம்பவங்களை ஒவ்வொன்றாக பதிவிடுகிறேன் . குறைகளிருந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள்

குணாளன் முகப்புத்தகம்