மலைப்பாம்புக்கு சிடி ஸ்கேன்...

அடிபட்ட மலைப்பாம்பு ஒன்றிற்கு சிடி ஸ்கேன் எடுத்து அதன் பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஒரிசாவில் கியோன்ஜார் மாவட்டத்தில் அடிபட்டு கிடந்த மலைப்பாம்பை வனத்துறையினர் கண்டு, அதனை மருத்துவமனைக்கு கொண்டெ சென்றுள்ளனர். 

மருத்துவர்கள் பாம்புக்கு எங்கு அடிபட்டிருக்கிறது என்பதை சோதிக்க எக்ஸ்ரே எடுத்தனர். ஆனால், அதில் சரியான முடிவுக்கு வர முடியாததால், அந்த பாம்பிற்கு சிடி ஸ்கேன் செய்துள்ளனர்.

இதில் பாம்புக்கு தலையில் அடிபட்டிருப்பது தெரிந்துள்ளது. பின்னர் மருத்துவர்கள் தொடர்ந்து பாம்பிற்கு உரிய சிகிச்சை அளித்து வருகின்றனர்.