வயோதிபர் படுகாயம்! யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கைது!

யாழ்ப்பாணம் பஸ்ரியன் சந்தியில் நேற்று வெள்ளிக்கிழமை (11) காலை, வீதியைக் கடக்க முற்பட்ட வயோதிபரை மோட்டார் சைக்கிளால் மோதிய குற்றச்சாட்டில், இரண்டு பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணப் போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த குருசுவீதி, சுண்டுக்குளி பகுதியை சேர்ந்த பீற்றர் (வயது 53) என்ற வயோதிபர் ஆபத்தான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.