24. 09. 2017 இன்றைய இராசிப் பலன்

மேஷம்

தன்னம்பிக்கையுடன் எதையும் செய்யத் தொடங்குவீர்கள். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். மனைவி வழியில் ஆதரவுப் பெருகும். வேற்றுமதத்தவர் அறிமுகமாவார். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். அதிஷ்ட எண்: 3அதிஷ்ட நிறங்கள்: மிண்ட்கிரே, வைலெட்

ரிஷபம்

இன்றையதினம் பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய உறவினர், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கு சாதகமாகும். வீட்டை அழகுப்படுத்துவீர்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். அதிஷ்ட எண்: 1அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, நீலம்

மிதுனம்

குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். அக்கம்&பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். நட்பு வட்டம் விரியும். வியாபரத்தில் சிலர் புது தொழில் தொடங்குவீர்கள். அதிஷ்ட எண்: 8அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, கிரே

கடகம்

எதிர்ப்புகள் அடங்கும். அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வெளியூர் பயணங்களால் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். அதிஷ்ட எண்: 6அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிளிப் பச்சை

சிம்மம்

குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வீடு, மனை வாங்குவது, விற்பது நல்ல விதத்தில் முடியும். விருந்தினர் வருகையால் வீடு களைக்கட்டும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். அதிஷ்ட எண்: 5அதிஷ்ட நிறங்கள்: வெளிர் மஞ்சள், ப்ரவுன்

கன்னி

குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். இங்கிதமாக பேசி எல்லோரையும் கவர்வீர்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் உதவுவார்கள். அதிஷ்ட எண்: 3அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ் பச்சை, வெள்ளை

துலாம்

ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் பழைய கசப்பான சம்பவங்களை பேசிக் கொண்டிருக்க வேண்டாம். உறவினர், நண்பர்களால் செலவினங்கள் அதிகரிக்கும். நெருங்கியவரிடம் உங்களின் மனக்குறைகளை சொல்லி ஆதங்கப்படுவீர்கள். யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும். அதிஷ்ட எண்: 1அதிஷ்ட நிறங்கள்: அடர் சிவப்பு, இளம்மஞ்சள்

விருச்சிகம்

கணவன் - மனைவிக்குள் மனம் விட்டு பேசுவது நல்லது. திடீர் பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள். பண விஷயத்தில் கறாராக இருங்கள். சகோதரங்கள் அதிருப்தி அடைவார்கள். வியாபாரத்தில் புது முதலீடுகளை யோசித்து செய்யப்பாரங்கள். அதிஷ்ட எண்: 9அதிஷ்ட நிறங்கள்: ஊதா, ரோஸ்

தனுசு

குடும்பத்தாரின் ஆதரவுப் பெருகும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். சபைகளில் மதிக்கப்படுவீர்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். பயணங்களால் பயனடைவீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். சிலர் புது கிளைகள் தொடங்குவீர்கள். அதிஷ்ட எண்: 2அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிரே

மகரம்

சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். உறவினர்கள், நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள். வெளியூரிலிருந்து மகிழ்ச்சிகரமான செய்தி வரும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். முயற்சியால் முன்னேறுவீர்கள். அதிஷ்ட எண்: 4அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ஆரஞ்சு

கும்பம்

கணவன் - மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அதிஷ்ட எண்: 6அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, நீலம்

மீனம்

சந்திராஷ்டமம் நீடிப்பதால் நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை, தாமதங்கள் ஏற்படும். சிலரின் தவறுகளை சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள். மற்றவர்களை முழுமையாக நம்பிக் கொண்டிருக்க வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். அதிஷ்ட எண்: 7அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, மயில் நீலம்