யாழில் மூத்த ஊடகவியலாளர் வீட்டில் பட்டப்பகலில் கொள்ளை!!

யாழ் உடுப்பிட்டிப் பகுதியில் ஊடகவியலாளர் தயாபரன் வீட்டில் இன்று பட்டப்பகலில் பெரும் கொள்ளை இடம் பெற்றுள்ளது. வீட்டில் உள்ளவர்கள் வெளியே சென்ற சமயம் வீட்டின் கதவை உடைத்து உள்நுழைந்த திருடர்கள்

நகைகள் மற்றும் பணம் உட்பட 25 லட்சத்துக்கும் அதிகமான பொருட்களைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக வல்வெட்டித்துறைப் பொலிசார் விசாரணைகளை நடாத்துகின்றனர்.