யாழ் சிறைக்குள் கோழி இறைச்சி கறிக்குள் ஹேரோயின் கொண்டு வந்த கில்லாடி

சிறைச்சாலைக்குள் கோழிக்கறியினுள் ஹெரோயின் கடத்த முற்பட்ட நபரொருவர் நேற்று (12.09. 2017) சிறைக்காவலர்களினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் நேற்று யாழ்ப்பாண சிறைச்சாலையில் இடம்பெற்றுள்ளது. விளக்கமறியலில் இருக்கும் கைதியொருவரை பார்ப்பதற்காக வந்த நபரொருவர் கொண்டு வந்திருந்த கோழிக்கறியினுள்ளேயே போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் யாழ்ப்பாண பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

பொலிசார் சந்தேகநபரை இன்று யாழ் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தினர். அவரை இம்மாதம் 26 ஆம் திகதி வரையும் விளக்க மறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.