டுபாயிலிருந்து வந்த இலங்கைப் பெண்கள் விமான நிலையத்தில் வைத்து கைது

40 மில்லியன் மதிப்புள்ள தங்க நகைகளை கடத்த முயற்சித்த இரு பெண்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இரு பெண்களையும், விமான நிலைய சுங்க அதிகாரிகள் இன்று காலை கைது செய்துள்ளனர்.

இரு இலங்கைப் பெண்களும் டுபாயிலிருந்து இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இதன்போது குறித்த பெண்களின் நடவடிக்கையில் சந்தேகம் கொண்ட சுங்க அதிகாரிகள் அவர்களை சோதனையிட்டுள்ளனர்.

இதன்போது 7.8 கிலோ கிராம் எடையுள்ள 40 மில்லியன் ரூபா மதிப்புள்ள தங்க நகைகளை தந்திரமான முறையில் மறைத்து வைத்திருந்தமை தெரியவந்துள்ளது.

இதையடுத்து குறித்த இரு பெண்களும் விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.