எயிட்ஸ் நோயால் திணறுகின்றது யாழ்ப்பாணம்!!

யாழ்ப்பாணத்தில் எயிட்ஸ் நோய்த் தொற்று பரவியவர்களின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளது. இந்தஆண்டில் எயிட்ஸ் நோயினால் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளதுடன்,

மேலும் மூன்று பேர் எயிட்ஸ்
நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாண போதான வைத்தியசாலையின்
மருத்துவர் தாரணி குருபரன் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.

நோய்த் தொற்று பரவி நீண்ட நாட்களுக்கு சிகிச்சை பெற்றுக்கொள்ளாதவர்களே அதிகம் இருக்கின்றனர்
என அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறானவர்களை காப்பாற்றுவது சாத்தியமற்றது என அவர்
சுட்டிக்காட்டியுள்ளார். பாதிக்கப்பட்டவர்களில் மூன்று பெண்களும் உள்ளடங்குகின்றனர் எனத்
தெரிவிக்கப்படுகிறது. எச்.ஐ.வீ நோய்த் தொற்றுக்கு இலக்காகியவர்களின் மொத்த எண்ணிக்கை
பற்றிய துல்லியமான தகவல்களை பெற்றுக்கொள்ள முடியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.