சிவகார்த்திகேயன் ஒதுங்கியது விஜய் சேதுபதிக்காகவா??

சிவகார்த்திகேயன் நடிப்பில், மோகன் ராஜா இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் படம் வேலைக்காரன். இந்த படம் கிரிஸ்துமஸ் விடுமுறைக்கு வெளியாகவுள்ளது.

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மலையாள நடிகர் பகத் பாசில் இந்த படத்தில் நடித்துள்ளார். 

இந்த படம் செப்டம்பர் 29 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், சில காரணங்களால் டிசம்பர் மாதம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில், அன்றைய தினத்தில் விஜய் சேதுபதியின் கருப்பன் படம் வெளியாக இருப்பதாக அறிவித்திருக்கின்றனர். 

செப்டம்பர் 29 ஆம் தேதி, ஜி.வி.பிரகாஷின் செம்ம, நயன்தாராவின் அறம், கௌதம் கார்த்திக்கின் ஹர ஹர மகாதேவகி, சந்தானத்தின் சர்வர் சுந்தரம் உள்ளிட்ட படங்கள் வெளியாகிரது என்பது குறிப்பிடத்தக்கது.