கிளிநொச்சி முருகானந்தா கல்லூரியில் தீ

கிளிநொச்சியின் முன்னணிப் பாடசாலைகளில் ஒன்றான முரசுமோட்டை முருகானந்தாக் கல்லூரியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த பாடசாலையின் மஹிந்தோதயா ஆய்வு கூடத்தின் தகவல் மற்றும் தொடர்புசாதன தொழிநுட்ப மத்திய நிலையைப் பகுதியில் மின் ஒழுக்கு ஏற்பட்டமை காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

பாடசாலை நேரத்தில் இந்த விபத்து ஏற்பட்டமையினால் மாணவர்கள், மற்றும் ஆசிரியர்கள் இணைந்து பிரதான மின்வழக்கும் பகுதி ஆழியை நிறுத்தி தீயை அணைத்து விபத்துப் பாதிப்பை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதனால் கணினிகள், தளபாடங்கள் என பல லட்சம் ரூபா பெறுமதியான சொத்துக்கள் அழிவடைந்துள்ளன.

மஹிந்தோதயா ஆய்வுகூடம் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபகச்வின் ஆட்சிக் காலத்தில் பாடசாலைகளுக்கு கட்டிக் கொடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.