யாழ் தட்டாதெருச் சந்தியில் காருடன் வைத்தியர் அட்டகாசம்!!

சட்ட மாணவன் ஒருவருடைய காரை மோதித் தள்ளியதுடன் அவரை கடுமையாக அச்சுறுத்தியுள்ளார் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை வைத்தியரொருவர்.

இச்சம்பவம் நேற்று சனிக்கிழமை (09.09.2017) யாழ் - காங்கேசன்துறை வீதியில் தட்டாதெரு சந்தியில் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து காங்கேசன்துறை பக்கமாக பயணித்த குறித்த சட்ட மாணவனின் காரை தட்டா தெரு பகுதியிலுள்ள பாதசாரிகள் கடவையில் முந்திய படத்திலுள்ள மருத்துவரின் கார் மோதியுள்ளது. இதனால் சட்ட மாணவனின் காரின் பக்க கண்ணாடிகள் நொருங்கியுள்ளது. எனினும் இதனை கருத்திலெடுக்காத மருத்துவர் குறித்த இடத்திலிருந்து நிற்காமல் சென்றுள்ளார். எனினும் அவரை பின் தொடர்ந்த சட்ட மாணவன் அவரது காரை நிறுத்தி நியாயம் கேட்டபோது தான் மருத்துவர் என்பதால் நிறுத்த தேவையில்லையெனவும் தன்னில் பிழையில்லாததால் தான் காரை நிறுத்தவில்லையெனவும் கூறியதுடன் அவரை மிரட்டிவிட்டு அவ்விடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக பொலிசாருக்கு முறையிடப்பட்டுள்ளது.