யாழ் கொக்குவில் பகுதி விபத்து!! உயிரிழந்தவர் யார் ?

ஆகஸ்ட் 12ம்திகதி கொக்குவில் குளப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் நபர் ஒருவர் காயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தார்.

இவ்வாறு விபத்து சேவை பிரிவில் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வந்த நபர் உயிரிழந்த நிலையில் சடலம் யாழ் போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் போக்குவரத்து பொலிஸார் குறிப்பிட்டனர்.

மேற்படி புகைப்படத்தில் உள்ள இவரது பெயர் முகவரி தொடர்பில் எவ்வித விபரங்களும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த நபர் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் அல்லது யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.