யாழ் பல்கலையில் பெண் ஊழியருடன் லீலை புரிய முற்பட்ட அதிகாரிகளுக்கு இன்று நடக்க போவது என்ன?

பெண் ஊழியர் ஒருவருடன் பாலியல் லீலை புரிய முற்பட்ட அதிகாரிகள் இருவர் தொடர்பாக யாழ் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் விடுத்துள்ள அறிவித்தல் இது.


பல்கலைக்கழக பெண் ஊழியர் ஒருவருடன் தகாதமுறையில் இரு நிர்வாக அதிகாரிகள் நடந்துள்ளனர். இவர்களின் இச்செயலைக் கண்டித்தும் அவ்விரு நிர்வாக அதிகாரிகள் மீது எவ்வித பாரபட்சமும் இன்றி உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள வலியுறுத்தியும் இன்று 08.09.2017 வெள்ளிக்கிழமை காலை 10.00மணிக்கு ஊழியர் சங்கத்தினது சகல அங்கத்தவர்களும் தத்தமது பணியிடங்களில் இருந்து வெளியேறி இராமநாதன் மண்டப முன்றலில் ஒன்றுகூடுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பல்கலைக்கழக ஊழியர் சங்கம்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
யாழ்ப்பாணம்.