07. 09. 2017 இன்றைய இராசிப் பலன்

மேஷம்

சில காரியங்களை அலைந்து, திரிந்து முடிக்க வேண்டி வரும். உறவினர், நண்பர்கள் உதவி கேட்டு தொந்தரவு தருவார்கள். அநாவசியச் செலவுகளை குறைக்கப்பாருங்கள். உடல் நலம் பாதிக்கும். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாமே. அதிஷ்ட எண்: 4அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், பிங்க்

ரிஷபம்

எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்களால் பயனடைவீர்கள். நம்பிக்கைக்குறியவர்களை ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யாகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். அதிஷ்ட எண்: 2அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ப்ரவுன்

மிதுனம்

உங்கள் அணுகுமுறையை மாற்றிக் கொள்வீர்கள். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். எதிர்பாராத சந்திப்பு நிகழும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். அதிஷ்ட எண்: 1அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, பச்சை

கடகம்

காலை 8.18 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் அவசரப்பட வேண்டாம். பிற்பகல் முதல் இருந்த சலிப்பு, சோர்வு, கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டு. கடனாக கொடுத்த பணம் கைக்கு வரும். உறவினர்களால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். அதிஷ்ட எண்: 7அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ப்ரவுன்

சிம்மம்

காலை 8.18 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் அநாவசிய பேச்சை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்ற போராட வேண்டியிருக்கும். உதவி செய்வதாக வாக்குக் கொடுத்தவர்கள் சிலர் இழுத்தடிப்பார்கள். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் அளவாக பழகுங்கள். அதிஷ்ட எண்: 8அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ஆரஞ்சு

கன்னி

உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். மனைவிவழி உறவினர்கள் மதிப்பார்கள். தாயாரின் உடல் நலம் சீராகும். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அதிஷ்ட எண்: 5அதிஷ்ட நிறங்கள்: கிரே, மஞ்சள்

துலாம்

கனிவான பேச்சால் காரியம் சாதிப்பீர்கள். உறவினர், நண்பர்கள் சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் திருப்பம் ஏற்படும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். அதிஷ்ட எண்: 3அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா

விருச்சிகம்

வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். அதிஷ்ட எண்: 6அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், கருநீலம்

தனுசு

முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். புது வேலைக் கிடைக்கும். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை தாண்டி முன்னேறுவீர்கள். அதிஷ்ட எண்: 9அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிரே

மகரம்

தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அரசாங்கத்தாலும், அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். அதிஷ்ட எண்: 6அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்

கும்பம்

காலை 8.18 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதனால் வீண் டென்ஷன் வந்து செல்லும். கணவன்- மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். வராது என்றிருந்த பணம் வரும். அரைக்குறையாக நின்ற வேலைகள் முடியும். நட்பு வட்டம் விரியும். உடல் நலம் சீராகும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்யோகத்தில் மேலதிகாரி உதவுவார். அதிஷ்ட எண்: 7அதிஷ்ட நிறங்கள்: ஊதா, இளஞ்சிவப்பு

மீனம்

காலை 8.18 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் சிலரின் விமர்சனங்களுக்கும், கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்துப் போகும். அடுத்தவர்களை குறைக் கூறிக் கொண்டிருக்காமல் உங்களை மாற்றிக் கொள்ளப் பாருங்கள். வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும். உத்யோகத்தில் அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர்கள்.அதிஷ்ட எண்: 1அதிஷ்ட நிறங்கள்: மயில் நீலம், ப்ரவுன்