30. 08. 2017 இன்றைய இராசிப் பலன்

மேஷம்

சந்திராஷ்டமம் நீடிப்பதால் இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்து நீங்கும். நெருங்கியவர்கள் சிலர் உங்களை உதாசீனப்படுத்தி பேசுவார்கள். உதவி செய்வதாக வாக்குக் கொடுத்தவர்கள் சிலர் இழுத்தடிப்பார்கள். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். உத்யோகத்தில் முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். அதிஷ்ட எண்: 7அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிரே

ரிஷபம்

சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். யோகா, தியானம் என மனம் செல்லும். மனைவிவழியில் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். அதிஷ்ட எண்: 5அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ஆரஞ்சு

மிதுனம்

குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பார். வழக்கில் திருப்பம் ஏற்படும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். அதிஷ்ட எண்: 2அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, நீலம்

கடகம்

குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். சொந்த-பந்தங்களின் அன்புத்தொல்லை குறையும். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். அதிஷ்ட எண்: 4அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, மயில் நீலம்

சிம்மம்

முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். வெளியூர் பயணங்களால் புது அனுபவம் உண்டாகும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் அமைதி நிலவும். அதிஷ்ட எண்: 1அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், மஞ்சள்

கன்னி

குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். சொத்துப் பிரச்னைக்கு சுமூக தீர்வு காண்பீர்கள். உறவினர்கள் மதிப்பார்கள். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். அதிஷ்ட எண்: 2அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், ப்ரவுன்

துலாம்

கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். முகப்பொலிவுக் கூடும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். உறவினர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். அதிஷ்ட எண்: 6அதிஷ்ட நிறங்கள்: வைலெட், இளஞ்சிவப்பு

விருச்சிகம்

ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். குடும்பத்தாருடன் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். அடுத்தவர்களை குறைக் கூறிக் கொண்டிருக்காமல் உங்களை மாற்றிக் கொள்ளப் பாருங்கள். வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. அதிஷ்ட எண்: 8அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ப்ரவுன்

தனுசு

குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வெளிவட்டாரத்தில் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் வேலைச்சுமையால் அசதி, சோர்வு வந்து விலகும். அதிஷ்ட எண்: 7அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், பிங்க்

மகரம்

குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். அதிஷ்ட எண்: 3அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ப்ரவுன்

கும்பம்

நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உறவினர், நண்பர்களால் ஆதாயம் உண்டு. நம்பிக்கைக்குறியவர்களை ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யாகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். அதிஷ்ட எண்: 9அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, பச்சை

மீனம்

திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். எதிர்பாராத பணவரவு உண்டு. வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். விருந்தினர் வருகை அதிகரிக்கும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். அதிஷ்ட எண்: 5அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ப்ரவுன்