தனிநபர் தகவல்களை திருட ஹேக்கர்கள் கையாளும் புதிய முறை

இணையத்தளங்களால் எவ்வளவு நன்மை இருக்கின்றதோ அதற்கு இணையாக தீமைகளும் காணப்படுகின்றன.

அவற்றில் தனி நபர்களின் தகவல்கள் திருடப்படுவது அண்மைக்காலமாக அதிகளவில் இடம்பெற்றுவருகின்றது.

இதற்காக பல்வேறு உத்திகளை கையாளும் ஹேக்கர்கள் தற்போது புதிய முறை ஒன்றினை பயன்படுத்துகின்றனர்.

இதன்படி பேஸ்புக்கின் ஊடாக மேற்கொள்ளப்படும் வினாடி வினாக்களுக்கு (Quizzes) விடை அளிக்கச் செய்தல், வாக்களித்தல் (Polls) என்பவற்றின் ஊடாக தகவல்களை திருடுகின்றனர்.

எனவே பேஸ்புக்கின் ஊடாக தகவல் திருடப்படுவதை தடுக்க நம்பிக்கை வாய்ந்த வினாடி வினா மற்றும் வாக்களித்தல் செயன்முறைகளில் மட்டும் ஈடுபடுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.