வடமராட்சி துன்னாலையில் பூச்சாண்டி காட்டும் புஸ்பா புருசன்

துன்னாலையில் கடந்த சில நாட்களாக பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளளது அனைவருக்கும் தெரிந்த விடயமாகும். மணல் கடத்தல்காரர்களை துரத்திச் சென்ற பொலிசார் அவர்களை பிடிக்க முற்பட்டு துப்பாக்கியால் சுட்ட போது மணல் கடத்தல் வாகனத்தில் சென்ற ஒருவர் பலியாகியதுடன் குறித்த பதற்றம் ஏற்பட்டது.

துன்னாலை கிராமம் என்பது வடமராட்சி மட்டுமல்ல, யாழ்ப்பாணம் முதல் ஏன் உலகம் வரை அறிந்த கிராமமாகும். 1987ம் ஆண்டு முன்னேறி வடமராட்சியில் நிலை கொண்டிருந்த இராணுவத்தை கரும்புலித் தாக்குதல் என்ற தற்கொலைத் தாக்கதல் மூலம் பின்வாங்கச் செய்த மில்லர் பிறந்த கிராமமாகும்.

குறித்த கிராமத்தில் பல சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வாழ்ந்தாலும் அவர்கள் தமக்கிடையே பெரும் ஒற்றுமையுடனேயே வாழ்ந்து வருகின்றார்கள்.

குறித்த கிராமத்தில் வாழ்பவர்களில் ஏராளமானவர்கள் கடுமையான உடல் உழைப்பையும் துணிச்சலான மன நிலையையும் கொண்டவர்கள் . இவ்வாறானவர்களுக்கிடையில் ஒரு சிலர் மணல் கடத்தல் மற்றும் சில சமூகவிரோதச் செயல்களில் ஈடுபட்டுவருவதும் உண்மையே.

இவ்வாறான மணல்கடத்தலில் ஈடுபட்டவர்களை பொலிசார் தடுத்து நிறுத்த முற்பட்ட போது ஏற்பட்ட குழப்பங்களில் ஒரு அப்பாவி உயிரிழந்தான். இதனையடுத்து அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் ரயர் எரிப்புக்களில் ஈடுபட்டமை தொடர்பாக செய்திகள் வெளிவந்திருந்தன.

அப்பகுதி மக்கள் நடாத்திய ஆர்ப்பாட்டம் பொலிசாருக்கு எதிரானது என்றாலும் குறித்த மக்கள் மணல் கடத்தல் மேற்கொள்ளும் இடத்தில் பொலிசார் பரிசோதனை செய்யாது மணல் கடத்தலே இல்லாத ஒரு இடத்தில் காவலரணை அமைத்து அங்கு நின்றதாலேயே தொடர்ச்சியான மணல்கடத்தல் மேற்கொள்ளப்பட்டது என்றும் சரியான இடத்தில் காவலரண் அமைத்திருந்தால் இவ்வாறான ஒரு குழப்ப நிலை ஏற்பட்டிருக்காது என தெரிவித்தும் தவறான இடத்தில் அமைக்கப்பட்டிருந்த காவலரணை அடித்து நொருக்கியிருந்தனர்.

அந்தக் காவலரண் எதற்காக அமைக்கப்பட்டது என்பது தொடர்பாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகின.

துன்னாலையைச் சேர்ந்த நோர்வேயில் வசிக்கும் ஒருவன் பல நுாறு பரப்பு காணியை வெலிக்கண் தோட்டம் என்ற இடத்துக்குச் சற்றுத் தொலைவில் முள்ளிப்பகுதியில் வாங்கியுள்ளான். பரப்பு ஆயிரம் ரூபா தொடங்கி 5 ஆயிரம் ரூபா வரையான பணத்திற்கு வாங்கிய அந்தக் காணியை அதிக விலைக்கு விற்பதற்காக மிகத் திறமையாக சூழ்ச்சிகள்  அப்பகுதியால் மணலுக்குள் வைத்து ஆயுதங்கள் கடத்தப்படுவதாக பொலிசாருக்கு பெட்டிசங்கள் போட்டு பொலிசாரையும் ஏமாற்றி நெருங்கிய உறவினர்கள் சிலர் மூலம் அப்பகுதியில் ஒரு பொலிஸ்காவலரணை அமைத்துள்ளான். பொலிஸ் நிலையம் தனது காணிக்குள் அமைப்பதற்கு சிறு துண்டு காணியும் கொடுத்துள்ளான். இதனால் தனது காணியை பெருமளவு விலைக்கு விற்கலாம் என அவன் திட்டமிட்டே மணல் கடத்தல் பகுதியில் அமைக்காது தனது காணிக்குள் காவலரணை  போடச் செய்தான்.

இவனது காணி வடமராட்சியில் உள்ள மனிதக் கழிவுகள், விலங்குக் கழிவுகள் மற்றும் ஏனைய கழிவகளைக் கொட்டுவதற்கு மட்டுமே சிறந்த இடம் என அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

இவனது காணிக்குள் இருந்த காவலரணே பொதுமக்களால் அடித்துடைக்கப்பட்டது. இதனால் கொதிப்படைந்த நோர்வே காவாலி காவலரணை அடித்து உடைத்த மக்களைப் பழிவாங்க முற்பட்டான். தனக்குச் சொந்தமான சில இணையத்தளங்கள் மூலம் அந்த மக்களை பயங்கரவாதிகளாகவும் கடத்தல்காரர்களாகவும் அவர்களது சாதியையும் இழுத்து மிகக் கேவலமான முறையில் செய்திகள் வெளியிடத் தொடங்கினான்.


இங்கு 1 இலக்கத்தில் போடப்பட்டிருப்பது புஸ்பா புருசன் சேதுவின் காணியில் இருக்கும் பொலிஸ் நிலையம்.  இலக்கம் 2 இல் குறித்துக் காட்டப்பட்டிருக்கும் இடமே உண்மையில் பொலிஸ் நிலையம் போட வேண்டிய  இடம் என துன்னாலைப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இங்கு பொலிஸ் காவலரண் அமைக்கப்பட்டால் எந்தவித மணல் கடத்தலோ அநியாய உயிரிழப்புக்களோ ஏற்படாது என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த நோர்வேக் காவாலி ஒரு வெற்று வேட்டு என்பது யாழ்ப்பாணத்தில் இவனைப் பற்றி அறி்ந்தவர்களுக்கு தெரிந்திருந்தாலும் அப்பாவிகளுக்கு இவனது செயற்பாடுகள் தெரியவாய்பில்லை என்பதால் இவன் வெளியிடும் செய்திகளால் கதிகலங்கினர்.

தேர்தல் வாக்காளர்  பட்டியலை இணையத்தில் எடுத்து தனது பகுதியான துன்னாலையில் உள்ள சில குறிச்சிகளைச் சேர்ந்தவர்களை தெரிவு செய்து அந்த பட்டியலில் உள்ள அடையாள அட்டைகளில் விபரத்தை தனது இணையத்தளத்தில் வெளியிட்டு இவர்கள் உடனடியாக பொலிசாரிடம் சரணடைய வேண்டும் என தான்   பூச்சாண்டி காட்டினான்.

நோர்வேயில் உள்ள துன்னாலையைச் சேர்ந்த குறித்த காவாலி யாழ்ப்பாணத்துக்கு வர முடியாது என்பது இங்குள்ள சிலருக்கு மட்டுமே தெரியும். அவன் இங்கு வந்தால் பல வருடத்துக்கு சிறைக்குள் செல்லும் அளவுக்கு அவனுக்கு வழக்கு விசாரணைகள் இருக்கின்றது.

இவன் தனது இணையத்தளங்களில் செய்தி வெளியிட்டு கப்பம் கோரிய சம்பவங்கள் மற்றும் பலரை அச்சுறுத்திய சம்பவங்கள், நீதமன்ற அவமதிப்பு போன்ற ஏராளமான வழக்குகள் இவனுக்கு காத்திருக்கின்றன.

இவ்வாறான ஒரு சமூக விரோதியின் அச்சுறுத்தலுக்கு யாரும் பயப்படத் தேவையில்லை. அத்துடன் குறித்த காவாலியான நோர்வேயில் வசிக்கும் துன்னாலைப் பன்னாடை தனக்கு யாழ்ப்பாணத்தில் உள்ள முக்கிய பொலிஸ் அதிகாரிகாரிகள் நண்பர்களாக இருக்கின்றார்கள் என கூறிவருவதும் ஏமாற்று வேலையே. ஏற்கனவே உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் வித்தியா கொலை வழக்கில் மாட்டுப்பட்டு உள்ளதால் ஏனைய பொலிஸ் அதிகாரிகள் வெளிநாட்டில் உள்ள யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சமூகவிரோதிகளுடன்  தொடர்பு வைத்திருக்க மாட்டார்கள்.

துன்னாலைப் பகுதியில் உள்ள ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்களை கேவலப்படுத்தி தனது இணையத்தளங்களில் எழுதியதாலும் தனது துன்னாலை வீட்டில் சி.சி.ரீவி கமராவைப் பொருத்தி தெருவால் செல்லும் துன்னாலைப் பெண்களை வீடீயோ எடுத்து தவறான இணையத்தளங்களில் வெளியிட்டதாலும் கோபடைந்த அப்பகுதி மக்கள் அவனது வீட்டு கமராக்களை உடைத்தனர்.

அதனால் கொதிப்படைந்த அவன் குறித்த சமூகத்தைச் சேர்ந்தவர்களை பயங்கரவாதிகளாக சித்தரித்து பொய்யான மொட்டைக்கடிதங்களை எழுதி பலருக்கும் அனுப்பி வருகின்றான்.

இலங்கை வரலாற்றிலேயே பொய்யான தகவல்களை மொட்கைகடிதங்களாக ஏராளமானவர்களுக்கு அனுப்பியவன் இந்த புஸ்பாவின் கணவனான சேது என்பது குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணத்தில் உள்ள பொலிஸ் உயரதிகாரிகள் உட்பட அனைத்து பொலிசாரும் மிகத் திறமையானவர்கள் மட்டுமல்ல சரியான குற்றவாளிகளைப் பிடிப்பவர்கள் என பலரும் தெரிவிக்கின்றனர். இவ்வாறான பொலிசார் துன்னாலையைச் சேர்ந்த நோர்வேயில் வசிக்கும் முக்கிய குற்றவாளியான அந்த சேதுவைப் பிடிக்காமல் விட்டுவிடுவார்களா? அல்லது அப்பாவிகளைப் பிடித்து தங்களது திறமையை கேள்விக்குறிக்கு உள்ளாக்குவார்களா என்பது பொறுத்திருந்து பார்க்க வேண்டிய ஒன்றாகும்.  அத்துடன் இவனுடன் யாழ்ப்பாணத்தில் தொடர்பு வைத்திருக்கும் பலர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். மிக விரைவில் அவர்களில் பலர் பிடிக்கப்பட்டு கம்பி எண்ண ஆயத்தமாகின்றனர்.