அவதானம்!! மக்களை வதைக்கும் தொற்றா நோய்கள் அதிகரிப்பு

உண­வு­களில் செயற்கை சுவை­யூட்­டி­களை பயன்­ப­டுத்­து­வதால் இலங்­கையில் நாளொன்­றுக்கு எழு­நூறு பேர் வீதம் தொற்றா நோய்க்கு உள்­ளா­வ­தாக சுகா­தார அமைச்சின் உணவு கட்­டுப்­பாட்டு பிரிவின் மருத்­துவ கலா­நிதி பாலித்த சமன் ஜயக்­கொடி தெரி­வித்தார்.

செயற்கை சுவை­யூட்­டி­களால் மக்­க­ளுக்கு ஏற்­படும் சுகா­தார பாதிப்பு குறித்து தெளி­வு ­ப­டுத்­து­வ­தற்­கான ஊடக சந்­திப்­பொன்று நேற்று செவ்­வாய்க்­கி­ழமை மூலோ­பாய தொழில் முயற்சி முகா­மைத்­துவ நிறு­வ­னத்தில் இடம்­பெற்­றது.

இதன்­போதே அவர் இந்த விட­யத்தை குறிப்­பிட்டார்.

இதன்­போது அங்கு சுகா­தார அமைச்சின் உணவு கட்­டுப்­பாட்டு பிரிவின் மருத்­துவ கலா­நிதி பாலித்த சமன் ஜயக்­கொடி தெரி­விக்­கையில்,

எமது நாட்டில் தடை­செய்­யப்­பட்ட உணவு சுவை­யூட்­டி­யான இர­சா­ய­னப்­பொருள் மறை­மு­க­மான முறையில் உண­வுப்­பொ­ருட்­களில் கலக்­கப்­ப­டு­கின்­றது. இதனால் எமது நாட்டில் நாளொன்­றுக்கு 700 பேர் வீதம் தொற்றா நோய்க்கு ஆளா­கின்­றனர்.

குறித்த இர­சா­யனப்­பொ­ருள்­களை சுவையை அதி­க­ரிப்­ப­தற்­காக உணவு உற்­பத்தி நிறு­வ­னங்கள் பயன்­ப­டுத்­தி­னாலும் அதனால் உட­லுக்கு பல்­வேறு பாதிப்­பு­களை ஏற்­ப­டுத்­து­கின்­றது. குறிப்­பாக இதனைப் பயன்­ப­டுத்­து­வதால் புற்­றுநோய், நரம்பு மண்­டலம் செய­லி­ழப்பு, மலட்­டுத்­தன்மை போன்ற நோய்கள் ஏற்­படும். ஆகவே இதனை பயன்­ப­டுத்­து­வதை மக்கள் தவிர்க்க வேண்டும் என்றார்.

இதன்­போது ஜனா­தி­பதி ஆலோ­சகர் அத்­து­ர­லிய ரத்ன தேரர் கருத்துத் தெரி­விக்­கையில்,

இலங்­கையில் குறித்த இர­சா­யனம் தடை­செய்­யப்­பட்­டி­ருப்­பினும் கடந்த வரு­டத்தில் மாத்­திரம் 2200 மெற்­றிக தொன் இர­சா­யனம் இலங்கை வர்த்­தக சந்­தைக்கு இறக்­கு­மதி செய்­யப்­பட்­டுள்­ளது.

எமது நாட்டில் விவ­சா­யத்­திற்கு பயன்­ப­டுத்தும் க்ளைப்­பொசைட் களை­நா­சி­னியால் மக்­க­ளுக்கு ஏற்­படும் பாதிப்­புக்கள் கார­ண­மாக அண்­மையில் அது முற்­றி­லு­மாக தடை செய்­யப்­பட்­டி­ருந்­தது. இந்­நி­லையில் குறித்த உணவு சுவை­யூட்­டியை கொண்டு கிரு­மி­நா­சி­னி­யாக பயன்­ப­டுத்­து­வ­தற்­கா­கவே இவ்­வாறு இறக்­கு­மதி செய்­யப்­ப­டு­வ­தாக தெரி­விக்­கின்­றனர்.

ஆகவே எந்­த­வொரு திட்­டத்­தையும் நடை­மு­றைப்­ப­டுத்­து­வதில் பாரிய சிக்கல் எழு­கின்­றது. நாட்டு நல­னுக்­காக சகல தரப்பும் தமது ஒத்­து­ழைப்­புக்­களை வழங்க வேண்டும். இலங்­கைக்கு இறக்­கு­மதி செய்­யப்­படும் குறித்த இர­சா­ய­னப்­பொருள் மொனோ­சோ­டியம் க்ளுடொமெட் எனும் பெயரில் மறை­மு­க­மாக உண­வு­களில் கலக்­கப்­ப­டு­கின்­றது. இது தொடர்பில் மக்­க­ளுக்கு தெளி­வூட்­டு­வ­தற்­கான நட­வ­டிக்­கைகளை சுகா­தார திணைக்­களம் மேற்­கொள்­ள­வேண்டும்.

குறித்த இர­சா­ய­னப்­பொருள் பாவ­னையை எமது நாட்டில் எதிர்­வரும் ஒரு­வ­ரு­ட­ கா­லத்­துக்குள் முற்­றிலும் தடை­செய்­வ­தற்கு எதிர்­பார்த்­துள்ளோம். அத்­துடன் மக்­க­ளுக்கு விநி­யோ­கிக்கப்­படும் எத்தகைய உணவுப்பொருள்களாக இருப்பினும் வேறு பெயரை குறிப்பிடாது மக்கள் அறிந்த இரசாயனப்பெயரையே குறிப்பிடுதல் வேண்டும். உணவில் சேர்க்கப்பட்டுள்ள அதன் அளவையும் சுட்டிக்காட்ட வேண்டும். இதற்கான சட்ட நடவடிக்கையை சுகாதார அமைச்சும், நுகர்வோர் அதிகார சபையும் இணைந்து முன்னெடுக்க வேண்டும் என்றார்.