அரியாலையில் மண் கடத்தியவர்கள் உழவு இயந்திரத்தையும் விட்டுவிட்டு தப்பியோடினர்!!

அரியாலை பகுதியில் சட்டவிரோதமான முறையில் மண் அகழ்வில் ஈடுபட்ட உழவு இயந்திர ஓட்டுநர்கள், பொலிஸாரைக் கண்டதும், உழவு இயந்திரங்களைக் கைவிட்டு விட்டு, தப்பிச் சென்ற சம்பவம் நேற்று  (12) இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய உப பொலிஸ்பரிசோதகர் சூரியகுமார் சொருபனின் தலைமையில் சென்ற பொலிஸார், மண் கடத்தில் ஈடுபட்ட சந்தேக நபர்களைக் கைது செய்ய முற்பட்டனர்.

இதன்போது, சிவில் உடையில் சென்ற பொலிஸாரைக் கண்டதும் மண் கடத்தல்காரர்கள் தப்பியோடியுள்ளனர். மீட்கப்பட்ட இரண்டு உழவு இயந்திரங்களும் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.