அக்காவை வைத்து பேக்கரி வாங்கிய வடிவேலுவைப் போல் யாழிலும் சம்பவம்!

தனது அக்காவை 22 வயது மூத்த வெளிநாட்டு புலம்பெயர் கிழவனுக்கு கட்டிக் கொடுத்துவிட்டு 20 பரப்புக் காணிக்கு சொந்தக்காரனாகியுள்ளார் அரச உத்தியோகத்தரான இளைஞன் ஒருவன்.

பேஸ்புக்கில் தன்னுடன் நட்புப் பேணிய 50 வயதான ஜேர்மனியில் வதிவிட உரிமை கொண்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நபர் ஒருவரை தனது 30 வயதான அக்காவுக்கு திருமணம் முடித்துக் கொடுத்துள்ளார் குறித்த இளைஞன்.

யாழ்ப்பாணம் வந்து இளைஞனை சந்தித்த 50 வயதான வெளிநாட்டு மாப்பிளை இளைஞனின் அக்கா மீது மோகம் கொண்டுள்ளார். அதன் பின்னர் குறித்த பெண்ணின் தொலைபேசி இலக்கத்தை வாங்கி வெளிநாடு சென்ற பின்னர் அப் பெண்ணுடன் தொடர்ச்சியாக கதைத்து வந்து அது காதலாக மாறியுள்ளது. தனது இளவயது நண்பனின் அக்கா எனக் கருதாது இளைஞனிடம் இது தொடர்பாக தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். இளைஞனும் இதற்கு உடன்பட்டுள்ளான்.

கடந்த மாதம் இருவருக்கும் பதிவுத்திருமணம் நடந்துள்ளது. பதிவுத் திருமணம் முடிந்த கையுடன் தனக்குச் சொந்தமான கைதடிப் பகுதியில் உள்ள 20 பரப்பு தோட்டத்தை தனது மச்சானான இளைஞனின் பெயருக்கு எழுதி வைத்துள்ளார் குறித்த மாப்பிளை.

மாப்பிளை ஏற்கனவே திருமணமாகி மனைவியை இழந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அக்காவின் பதிவுத் திருமணத்துக்கு நண்பர்களை அழைத்திருந்தார் குறித்த இளைஞன். அங்கு சென்ற நண்பர்கள் அக்காவின் மாப்பிளையின் வயதையும் இளைஞனுக்கு கொடுத்த காணியையும் வைத்து வடிவேலு பாணியில் நடந்த கல்யாணம் என கதை பரப்பி வருகின்றனர்.