மலையகத்தில் ஐஸ் மழை!

நாடளாவிய ரீதியில் நேற்று பல இடங்களிலும் மழை பெய்துள்ளது. இந்த நிலையில் நுவரெலியாவில் ஐஸ் மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நுவரெலியா மற்றும் வெளிமடை பகுதிகளிலேயே இவ்வாறு ஐஸ் மழை பெய்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மத்திய மலை நாட்டில் அண்மைக்காலமாக அடை மழை பெற்றுவருகின்ற நிலையில் நேற்று மாலை சுமார் 03 மணிமுதல் 03.15 மணிவரை ஐஸ் மழை பெய்துள்ளது.

இதனால் குறித்த பகுதிகளில் கடுமையான குளிர் நிலவியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.