நாவற்குழியில் பொல்லடி! தோட்டத்தில் வேலை செய்தவர் படுகாயம்!

தோட்­டத்­தில் வேலை செய்­து­கொண்­டி­ருந்த குடும்­பத்­த­லைவர் ஒரு­வர் பொல்­லால் தாக்­கப்­பட்ட நிலை­யில் சாவ­கச்­சேரி மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­டுள்­ளார்.

இந்தச் சம்­ப­வம் நேற்­று­முன்­தி­னம் இரவு நாவற்­குளி பகு­தி­யில் இடம்­பெற்­றது.

காய­ம­டைந்த நபர் சம்­ப­வ­தி­னம் இரவு தோட்­டத்­தில் வேலை செய்­துள்­ளார். அப்­போது யாரோ தோட்­டத்துக்கு வெளியே நின்று அழைக்­கும் குரல் கேட்­டுள்ளது.

குரல்­கேட்டு வௌியே வந்த அவரை இனந்­தெ­ரி­யாத ஒரு­வர் பொல்­லால் தாக்­கி­விட்டு தப்­பி­யோ­டி­யுள்ளார் எனக் கூறப்­ப­டு­கி­றது. தாக்­கு­த­லால் தலை­யில் காய­ம­டைந்த அவர் உட­ன­டி­யாக மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­டார்.

நாவற்­குளி ஐய­னார் கோவி­ல­டி­யைச் சேர்ந்த தங்­க­ராசா றொசான் (வயது –30 ) என்­ப­வரே இவ்­வாறு தாக்­கு­த­லுக்கு இலக்­கா­ன­வர் ஆவார்.