பிக்பாஸ் நிகழ்ச்சியின் புது வரவு நடிகை நந்திதாவா; ப்ரியா பவானிசங்கரா?

பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பத்தில் இருந்த பரபரப்பு இப்போது ரசிகர்களிடம் இல்லை என்றே சொல்லலாம். ஓவியா வெளியே வந்தது ரசிகர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஓவியா இல்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது.

இந்நிலையில் புது நடிகை ஒருவரை பிக்பாஸ் வீட்டிற்கு அழைத்து வரப் போகிறார்களாம். நடிகை நந்திதா. விஜய் சேதுபதியுடன் சேர்ந்து நடித்த நந்திதா ஸ்வேதா வரும் 15ம் தேதி பிக் பாஸ் வீட்டிற்கு வரக்கூடும் என்று கூறப்படுகிறது. மற்றொருவர் கல்யாணம் முதல் காதல் வரை டிவி சீரியல் புகழ் ப்ரியா பவானிசங்கர் பிக் பாஸ் வீட்டிற்கு வருகிறார் என்றும்  செய்திகள் வெளியாகியுள்ளது.

ஓவியாவை மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்கு அழைத்து வரும் முயற்சியிலும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஈடுபட்டுள்ளார்களாம்.  ஓவியா வரவை எதிர்பார்த்து இருக்கிறது ஓவியா ஆர்மி. ஆனால் வரப்போவது நந்திதாவா, ப்ரியாவா என்பது 15ம் தேதி  தெரியும். யார் வந்தாலும் ஓவியா அளவுக்கு இருக்க முடியாது என்பது உண்மை. பொறுத்திருந்து பார்ப்போம்.