கைதடியில் வீதியால் சென்று கொண்டிருந்தவர்கள் மீது காவாலிகள் கல் வீசித் தாக்குதல்! இருவர் படுகாயம்!

யாழ்ப்பாணம் கைதடி பகுதியில் வீதியால் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த இருவர் மீது இனம் தெரியாத நபர்கள் கல்வீச்சு தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இச் சம்பவம் இன்று மாலை 4:00 மணியளவில் கைதடி மானிப்பாய் வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த கைதடி மேற்கு பகுதியை சேர்ந்த வயது 38 குடும்பஸ்தர் ஒருவரும் 24 வயதுடைய இளைஞர் ஒருவரும் சம்பவத்தில் காயமடைந்து சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பாக சாவகச்சேரி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.