வாள் வெட்டில் முடிந்த குடும்பத் தகராறு; நால்வர் படுகாயம்; ஒருவர் நிலை?

கிளிநொச்சி மாவட்டம் பளை பகுதியில் குடும்பத் தகராறு வாள்வெட்டில் முடிந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. குறித்த சம்பவம் நேற்றைய தினம் பிற்பகல் வெளையில் நடந்துளதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

பளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சங்கத்தார் வயல் என்ற கிராமத்தில் இரண்டு தரப்பினர்க்கிடையே குடும்பத்தகராறு ஏற்பட்டுள்ளது. வாய்த்தர்க்கம் தொடர்ந்த நிலையில் அது கைகலப்பாக மாறி வாள் வெட்டில் முடிந்துள்ளது.

இதனால் இந்தச் சம்பவத்தில் நால்வர் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்த நால்வரும் பளை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இவர்களில் ஒருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், மேலும் மூன்றுபேர் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி A.S.W. றஞ்சண பண்டார தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணையில் ஈடுபட்டுவரும் பளை பொலிஸார், குடும்பத் தகராறு காரணமாகவே மேற்படி வாள்வெட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடுகின்றனர்.