வைரலாகும் சமந்தா நாக சைத்தன்யாவின் திருமண அழைப்பிதழ்!!

நடிகை சமந்தா மற்றும் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் காதலித்து வந்தனர். இவர்களுக்கு கடந்த சில் மாதங்களுக்கு முன்னர் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இந்நிலையில், இவர்களது திருமணம் அக்டோபர் மாதம் 6 ஆம் தேதி, கோவவில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக தற்போது இவர்களது திருமண அழைப்பிதழ் வெளியாகியுள்ளது.

அக்டோபர் 6 மற்றும் 7 ஆம் தேதி கோவாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நடைபெறயுள்ளது. இவர்களது திருமணத்தில் உறவினர்கள் மட்டும் பங்கேற்பார்களா அல்லது திரை பிரபலங்களும் பங்கேற்பார்களா என்ற விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.