அஜித்தின் 'விவேகம்' படத்தில் ஜேம்ஸ்பாண்ட் பட நடிகை

அஜித் நடித்துள்ள 'விவேகம்' திரைப்படம் ஜேம்ஸ்பாண்ட் டைப்பில் உருவான ஒரு சர்வதேச தர திரைப்படம் என்று கூறப்பட்டு வரும் நிலையில் இந்த படத்தில் உண்மையிலேயே ஜேம்ஸ்பாண்ட் பட நடிகை ஒருவர் அதிரடி ஆக்சன் காட்சிகளில் நடித்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது.

பல படங்களில் ஜேம்ஸ்பாண்ட் கேரக்டரில் நடித்த பியர்ஸ் பிராஸ்னன் நடித்த 'தி நவம்பர் மேன்' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த ஹாலிவுட் நடிகை அமிலா டெர்ஜிமெஹிக் என்பவர் 'விவேகம்' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்ததோடு, ரிஸ்கான சண்டைக்காட்சிகளில் டூப் இன்றி நடித்துள்ளாராம்

இயக்குனர் சிவா மற்றும் அஜித்துடன் நடித்ததை பெருமையாக கருதுவதாக கூறிய அமிலா, அஜித்தை முதன்முதலில் சந்தித்தபொழுது துளி கூட தலைக்கனம்  இல்லாமல் அவ்வளவு எளிமையாக மனிதராக எல்லோருடனும் பழகியதை பார்த்து ஆச்சரியம் அடைந்ததாகவும்,  அவருடைய தொழில் பக்தியை இதுவரை வேறெந்த நடிகரிடமும் பார்த்ததில்லை என்றும் கூறியுள்ளார். மேலும் இவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் இன்னமும் அவரது கண்களில் ஒரு சிறுவனின் துள்ளலும்  பாசிட்டிவிட்டியும் உள்ளதை தான் கவனித்ததாகவும் அவர் தெரிவித்தார்