யாழ். வடமராட்சியில் வாள்வெட்டு! ஒருவர் படுகாயம்

யாழ். வடமராட்சி அல்வாய் பகுதியில் இனந்தெரியாத நபர்களின் வாள்வெட்டுக்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இந்த வாள்வெட்டுச் சம்பவம் நேற்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.

இதில் படுகாயமடைந்த நபர் சிகிச்சைகளுக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அல்வாய் வடக்கு முத்துமாரியம்மன் கோவிலடியைச் சேர்ந்த சின்னத்தம்பி கமல்ராஜ் (வயது-53) என்பவரே வாள்வெட்டுக்கு இலக்காகியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.