இன்று காலை புங்குடுதீவில் நடந்த கொடூரம்!! (photos)

பெரியகிராய் பக்கம் துர்க்கையம்மன் கோயிலுக்கு கிட்ட றோட்டிலே இ.ந்நிகழ்வு. தற்போது யாழ்ப்பாணத்தில் நல்லூர் கோயில் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருக்கும் நேரம் சிலர் கோமாதாவை அதுவும் பயமறியாத இளங்கன்றை வெட்டி விற்பனை செய்திருக்கிறார்கள்.

பின் இதைப்பற்றி அலசி ஆராய்தததில் பல தகவல்கள் வெளிவந்தன. இப்பகுதி தற்போது இங்குள்ள சிலர் வேறு மாவட்ட ஆட்களுடன் சேர்ந்து கள்ள மாடுகளை இரவிரவாக வெட்டி விற்பனை செய்து வரும் அதிர்ச்சி தகவல் வெளியாகியது.

இதிலே வெளிமாவட்ட சில பேர்வழிகள் இங்கு 3 மாதமாக தங்கியிருந்து இவர்களுடன் இந்த வேலைகளைச் செய்வதாக தகவல். இதைப்பற்றி இப்பகுதி மக்கள் கிராமசேவகரிடம் முறையிட்டும் வினைத்திறன் இல்லாத அவரால் எதுவும் செய்யமுடியாத நிலமை வேறு. இந்தப்பிரதேசமே வித்தியா கொலை நடந்த இடத்தின் ஒரு பகுதி அவர்களுக்கு தற்போது நீதி மன்ல்றில் வழக்குகள் நடந்த வருவது யாவரும் அறிந்ததே.

இந்நிலமையை இப்போதே கட்டுப்படுத்தவிட்டால் நாளைக்கு இது பெரிய பிரச்சினையாக உருவெடுக்கும். தற்போது இந்தப்பகுதியில் நடந்த திருட்டுச்சம்பவத்தில் அவர்கள் பயன்படுத்திய ஏணி இங்கு வேலியில் சாத்தப்பட்டிருக்கிறது. இந்த ஏணி கடலுக்கு பயன்படுத்தப்படும் தடிகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. என்ன பிரச்சினையென்றால் வேறு மாவட்டத்தில் இருந்து இங்கு 3 மாதமாக தங்கியிருப்பவர்கள் இவர்களுடன் சேர்ந்து இந்த வேலைகளில் ஈடுபடலாம் என்ற சந்தேகம் எழுகிறது. இவர்கள் ஏன் இங்கு 3 மாதமாக தங்கியிருக்கிறார்கள். இதைப்பற்றி சற்று சிந்திக்க வேண்டியிருக்கிறது.

அரச நிர்வாகம் சரியாக வினைத்திறனாக செயற்படுவதில்லை. இதை வேலணை அரசஅதிபர், ஊர்காவற்றுறை நீதிபதி, வடமாகாணசபை போன்றவை சரியாக முறையில் செயற்பட்டு பொலிஸ் ரோந்து மிகமுக்கியமதானது. காலை 4 மணிக்கு மாடுகள் உரிக்கப்பட்டு கால்நடையாக வேறு வட்டார தரகர்கள் எடுத்துச் சென்று விற்பனை செய்கிறார்கள்.

இங்கு வேலணை பிரதேச சபையின் மாட்டுஇறைச்சி விற்பனை நிலையம் அமைக்கப்படுவதும் இந்த பிரச்சினைக்கு ஓரளவு தீர்வு கிடைக்கலாம். இவ்வூர் மக்கள் விரைந்து செயற்படாவிட்டால் மாடுகள் அழிக்கப்பட்டு விடும். இந்த மாட்டு இனம் ஊர் மாடு கழுத்திலே கொம்பு மாதிரி வளைவு உள்ள மாட்டு இனம் சிறந்த இனம் வெளிநாட்டு மாட்டுப்பால்களை விட இவற்றின் பால் சிறந்தது. மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்டது. எனவே இந்த எமது இன மாடுகளை அழிய விடாது அடுத்த சந்ததிக்கு எடுத்துச் செல்வது எங்களின் கடமையல்லவா?