அப்படி போடு அறுவால, தமிழன் ஆளப்போறாண்டா! எஸ்.ஜே.சூர்யா பெருமிதம்

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'மெர்சல்' படத்தின் புதிய போஸ்டர் இன்று வெளியாகி மிகபெரிய வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக 'ஆளப்போறான் தமிழன்' என்ற வார்த்தை திரையுலகை மட்டுமின்றி அரசியல்வாதிகளையும் அதிர செய்துள்ளது.

ஏற்கனவே ரஜினி, கமல் அரசியலுக்கு வந்துவிடுவார்களோ என்ற அச்சத்தில் இருக்கும் அரசியல்வாதிகள் விஜய்யின் இந்த போஸ்டரை பார்த்து கதிகலங்கி இருப்பதாகவும், இப்படியே போனால் நடிகர்கள் எல்லாம் அரசியல்வாதிகளாகவும், அரசியல்வாதிகள் எல்லாம் நடிகராகவும் மாறிவிடும் வாய்ப்பு இருப்பதாக கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் 'மெர்சல்' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள எஸ்.ஜே.சூர்யா, 'ஆளப்போறான் தமிழன்' என்ற வாசகம் குறித்து 

அப்படி போடு அறுவால என்று தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே விஜய் நிச்சயம் அரசியலுக்கு வந்து நல்லது செய்வார் என்று ஒரு பேட்டியில் அவர் கூறியிருந்த நிலையில் தற்போது அவருக்கு ஆதரவு கொடுக்கும் வகையில் இந்த டுவீட்டை எஸ்.ஜே.சூர்யா தட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.