10. 08. 2017 இன்றைய ராசிப் பலன்கள்

மேஷம்

குடும்பத்தாரின் ஆதரவுப் பெருகும். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். புது வீடு வாங்க திட்டமிடுவீர்கள். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்யோகத்தில் அதிகாரிகள் மத்தியில் செல்வாக்கு உயரும். அதிஷ்ட எண்: 3அதிஷ்ட நிறங்கள்: மயில்நீலம், பிங்க்

ரிஷபம்

எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். உடன்பிறந்தவர்களின் பிரச்னையை தீர்த்து வைப்பீர்கள். மனதிற்கு இதமான செய்திகள் வரும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். அதிஷ்ட எண்: 1அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ்பச்சை, ரோஸ்

மிதுனம்

குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் தைரியமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அதிஷ்ட எண்: 8அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, க்ரீம்வெள்ளை

கடகம்

சந்திராஷ்டமம் தொடர்வதால் சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்துக் கொள்ளுங்கள். சிலர் உங்களை தாழ்த்திப் பேசினாலும் கலங்காதீர்கள். வியாபாரத்தில் வசூல் மந்தமாக இருக்கும். உத்யோகத்தில் மறதியால் பிரச்னை வந்து நீங்கும். அதிஷ்ட எண்: 6அதிஷ்ட நிறங்கள்: அடர்சிவப்பு, கிரே

சிம்மம்

பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். மனைவிவழியில் ஆதாயம் உண்டு. வேற்றுமதத்தவர் அறிமுகமாவார். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் மேலதிகாரி மதிப்பார். அதிஷ்ட எண்: 5அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், வைலெட்

கன்னி

குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள். பயணங்கள் திருப்திகரமாக அமையும். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். அதிஷ்ட எண்: 3அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா

துலாம்

புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள். அதிஷ்ட எண்: 1அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, பிங்க்

விருச்சிகம்

நீண்ட நாட்களாக பார்க்க நினைத்தவரை சந்திப்பீர்கள். பழைய கடனை தீர்க்க புது வழி பிறக்கும். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். அதிஷ்ட எண்: 9அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், வெளிர் நீலம்

தனுசு

குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்சனைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். பிரபலங்களின் நட்பு கிட்டும். உறவினர்கள் உங்களின் பெருந்தன்மையைப் புரிந்துக் கொள்வார்கள். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். அதிஷ்ட எண்: 2அதிஷ்ட நிறங்கள்: கிரே, இளஞ்சிவப்பு

மகரம்

கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். அதிஷ்ட எண்: 4அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிளிப்பச்சை

கும்பம்

ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் சில நேரங்களில் மன அமைதியற்ற நிலை படும். குடும்பத்தாருடன் இணக்கமாக செல்லவும். முன்கோபத்தால் பகை உண்டாகும். மற்றவர்கள் விஷயத்தில் அநாவசியமாக தலையிட வேண்டாம். உத்யோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. அதிஷ்ட எண்: 6அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ஊதா

மீனம்

குடும்பத்தினரை அனுசரித்துப் போங்கள். பண விஷயங்களில் சாக்குப் போக்கு சொல்லி சமாளிப்பீர்கள். வேலைகளை உடனே முடிக்க வேண்டுமென நினைப்பீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.அதிஷ்ட எண்: 7அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், வெளீர்நீலம்