புலிகள் இயக்கத்தை விட்டு களவாக ஓடி வந்த சிறிதரன்!! போட்டுடைத்தார் அரியரத்தினம்!!

விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து இடையில் அமைப்பை விட்டு வந்தவருக்கு கண்டாவளை பாடசாலையின் அதிபராக நியமித்தமைக்காக புலிகளின் கண்டனத்திற்கு உள்ளாக்கப்பட்டேன். அந்த நன்றியுணர்வுகூட இன்றி இன்று என் மீது அவதூறு பரப்பி வருகின்றார், என பாராளுமன்ற உறுப்பினா் சிறிதரன் தொடர்பில் வட மாகாண சபை உறுப்பினா் ப.அரியரத்தினம்  தெரிவித்துள்ளார்.

இன்று புதன் கிழமை பிற்பகல் மூன்று முப்பது மணியளவில் கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போதே அவா் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவா் மேலும் தெரிவித்ததாவது,

விடுதலைப்புலிகள் அமைப்பை விட்டுவிட்டு இடையில் வந்தவருக்கு மீண்டும் ஆசிரியர் நியமனம் வழங்கி, பின்னர் அவரை கண்டாவளை மகா வித்தியாலயத்தின் அதிபா் வெற்றிடத்திற்கு நியமித்தேன். அப்போது விடுதலைப்புலிகளின் கல்வி பிரிவு பொறுப்பாளராக இருந்த அருள்மாஸ்ரா் எனக்கு தனது கண்டனத்தை தெரிவித்திருந்தார்.

அதாவது இயக்கத்திலிருந்து இடையில் வந்தவருக்கு பதவியுயர்வு வழங்கியிருக்கின்றீர்கள், அதுவும் தளபதி தீபன் ஊரில் அவரது வீட்டுக்கு அருகில் உள்ள பாடசாலைக்கு என தெரிவித்து என் மீது கோபப்பட்டுக்கொண்டார். நான் அப்போது அவருக்கு சொன்னது யாதெனில் நான் இவற்றை பற்றி எதுவும் சிந்திக்கவில்லை. கண்டாவளை பாடசாலையில் அதிபா் வெற்றிடம் காணப்பட்டது அதற்கு சிறிதரனை நியமித்தேன் என்றேன்.

மேலும்

1971 ஆம் ஆண்டு கல்விச் சேவைக்கு வந்த நான் 2013 ஆம் ஆண்டு ஓய்வுபெற்றேன். 46 வருடங்கள் கல்விச் சேவையில் இந்த மண்ணில் பணியாற்றியிருக்கிறேன். ஆசிரியராக, அதிபராக, கல்விப் பணிப்பாளராக, வட மாகாண மேலதிக கல்விப் பணிப்பாளராக என எனது கல்விச் சேவை காணப்பட்டது.

எனவே என் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க தமிழரசு கட்சியின் கிளை தீர்மானம் எடுப்பது என்பது அது தமிழரசுக் கட்சியின் தீர்மானம் அல்ல அது பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் தீர்மானமே இது தொடர்பில் நான் கட்சித்தலைவரிடம் தெரிவிக்கவுள்ளேன். எனத் தெரிவித்துள்ளார்.

மேலும்

பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனுக்கு ஒன்று நன்றாகத்தெரியும். நான் எப்போதும் நேர்மை தவறி நடப்பவன் அல்ல என்பது. அதுதான் நான் வடக்கு மாகாண கல்வி அமைச்சராக வந்துவிடக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்தார். மாகாண சபைத்தேர்தல் முடிந்தவுடன் குருகுலராஜாவை கல்வி அமைச்சராக நியமிக்க வலியுறுத்த கோரி கிளிநொச்சியில் இருந்து சில அதிபா்களையும்,  ஆசிரியர்களையும் ஒழுங்குப்படுத்தி தமிழரசுக் கட்சியின் தலைவரையும் முதலமைச்சரையும் சந்திக்க செய்து.

நான் கல்வி அமைச்சராக வந்திருந்தால் தனது அரசியலுக்காக சட்டவிரோதமாகவும் முறைகேடாகவும் கல்வி நடவடிக்கைகளில் தலையீடு செய்ய அனுமதித்திருக்க மாட்டேன்.  கல்வி அமைச்சராக இருந்த குருகுலராஜா மிகவும் நேர்மையானவா் அவா் எப்பொழுதும் ஊழல் மோசடிகளில் ஈடுபடுவா் அல்ல. அவா் மீது முதலமைச்சர்  நியமித்த விசாரணைக்குழு சுமத்திய எட்டு குற்றங்களும் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனால் செய்விக்கப்பட்டதே. எனத் தெரிவித்த தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி வடக்கு மாகாண சபை உறுப்பினா்

வட்டக்கச்சி மகா வித்தியாலயத்தில் ஆசிரியராக இருந்த போது பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் பாடசாலை அதிபருக்கு எதிராக நடந்துகொண்ட செயற்பாடு காரணமாக அப்போது கல்விப் பணிப்பாளர் கமலநாதனால் பரந்தன் மகா வித்தியாலயத்திற்கு தண்டனை இடமாற்றம் வழங்கப்பட்டவா்.இவரே இன்று என் மீது ஒழுக்காற்று நடவடிக்கைக்கு தீர்மானித்திருக்கின்றார். இதுவரை என்னை ஒரு தடவையேனும் அழைத்து பேசாது தன்னிச்சையாக அதிகாரத்தனத்தோடு, செயற்படுகின்றார் எனவும் தெரிவித்தார்.